தமிழகத்தின் சிறப்புக்களை வெளிகாட்டும் கோயில்கள்: முழு விபரம் இதோ
பொதுவாக இந்தியா- தமிழகம் என்றால் அதில் கோயில்களுக்கு பஞ்சமே இருக்காது.
காலங்காலமாக இந்து மக்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் நாம் பார்த்து வியந்து போகும் அளவிற்கு கலாச்சாரத்துடன் கூடிய பல கோயில்கள் உள்ளன.
கோயில்கள் மட்டுமல்ல அங்குள்ள தெய்வங்களும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் என கூறப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் நம் ஊரின் மகிமையை பார்த்து வியந்து போய் உள்ளனர். ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் பராமரித்து வரும் இந்த கோயில்களில் ஒவ்வொன்றிற்கு தனி சிறப்பு உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள டாப் 5 கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றத மீனாட்சி அம்மன் கோயில் தமிழகத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்த கோயிலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்றும் அழைப்பர்.
2. குமரி அம்மன் கோயில் - கன்னியாக்குமரி
இந்த கோயில் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷமாக குமரி அம்மன் கோயில் பார்க்கப்படுகின்றது. இந்த கோயிலிலுள்ள அம்மன், கன்னிப் பெண்ணாக, வலது கையில் ஜப மாலையுடன் காட்சி கொடுக்கிறார்.
இதற்கான முக்கிய காரணம், “பானாசுரன்” என அழைக்கப்படும் அசுரனை வதம் செய்வதற்காக எடுத்த அவதாரமாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோயில் அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
3. சிதம்பரம் நடராஜர் கோயில்
தமிழகம் - சிதம்பரம் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருக்கும் சிவன் நடராஜர் கோலத்தில் காட்சி தருகிறார். வைணவ மற்றும் சைவ தெய்வங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் தமிழகத்திலுள்ள முக்கிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக காணப்படுகிறது.
4. அருணாச்சலேஸ்வரர் கோயில் - திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் காணப்படும் இந்த கோயில் சிவனின் பஞ்ச பூத தலங்களில் ஒன்று. அக்னி தலமாக பார்க்கப்படும் இந்த கோயிலில் சிவ பெருமான் அக்னி லிங்கமாகவும், மலையாகவும் காட்சி தருகிறார்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலை 9 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் கட்டியுள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
5. ராமநாத சுவாமி கோயில்- ராமேஸ்வரம்
12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக காணப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் சிவ லிங்கம், சீதா தேவியால் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கோயில் சிவனை, ராமர் வழிபட்ட புண்ணிய தலமாக பக்தர்கள் பார்க்கிறார்கள். இதனால் அநேகமான பக்தர்கள் அடிக்கடி இங்கு வந்து செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |