ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு 5 லட்சம் பணத்தால் அலங்காரம்- எங்கு தெரியுமா?
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் விஷேசம் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த மாதம் ஆகும். அப்படியாக, ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு 5 லட்சம் பணத்தால் அலங்காரம் செய்ப்பட்டு வழிபாடு நடைப்பெற்றது. அதைப் பற்றி பார்ப்போம்.
திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மற்றும் நித்தியானந்தபுரம் பகுதியில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு முத்துக்கண்மாரியம்மன். இங்கு ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
அதாவது, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டிக்கொள்ளும் விதமாக முத்துக் கண் மாரியம்மனுக்கு ரூபாய் 500, 1000, 10, 20 என அனைத்து விதமான ரூபாய் நோட்டுகளினாலும் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கொண்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
பல லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப் பட்ட அம்மன் பார்ப்பதற்கே மிக அற்புதமாக காட்சி அளித்தாள். இந்த அலங்காரத்தை காண பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து அம்மனின் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







