பண கஷ்டம் விலக துளசி செடியின் அடியில் இதை வைத்தால் போதும்
இந்துக்கள் வீடுகளில் துளசி செடி வளர்ப்பது என்பது முதன்மையாக கருதப்படுகிறது. அதாவது, துளசி செடியில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வதால், வீட்டில் துளசி செடி வளர்ப்பது மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.
அப்படியாக, நம் வீடுகளில் ஏற்படும் பொருளாதார கஷ்டங்கள் விலக துளசி செடியின் அடியில் இந்த பொருளை வைத்தால் நல்ல மாற்றத்தை காணமுடியும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். நம்முடைய வாஸ்து சாஸ்திர படி துளசி மிகவும் மங்களகரமான செடியாக கருதப்படுகிறது.
வீடுகளில் துளசி செடி வளர்த்து அதை நன்றாக பராமரிக்க வீட்டில் உள்ள வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், துளசி செடியை வீட்டில் நடும் பொழுது, அதற்கடியில், ஒரு ரூபாய் நாணயத்தைப் புதைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. காரணம், துளசி செடியின் அடியில் நாணயம் வைத்து செடி வளரும் பொழுது வீட்டில் செல்வமும் சேர்ந்து வளரும் என்பது ஐதீகம்.
நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த பரிகாரம் ஆகும். அதே போல், வீட்டில் உள்ளவர்களுக்கு சனி மற்றும் ராகு கேது தோஷம் விலகவும் வீட்டில் துளசி செடியின் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைப்பது நல்ல பரிகாரமாக அமையும் என்கிறார்கள்.
மேலும், வீடு கட்டும் பொழுது தடங்கலும், வீட்டில் எந்த ஒரு தோஷமும் நெருங்காமல் இருக்க துளசிச் செடியின் அடிப்பகுதியில் வெள்ளி அல்லது செம்பால் (Copper) செய்யப்பட்ட ரூபாய் நாணயத்தைப் புதைப்பது நல்ல நிவாரணம் அளிக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
ஆக, இவ்வாறு பரிகாரம் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை காலையில் நன்றாக குளித்து விட்டு, விஷ்ணு பகவானை மனதார வேண்டிக்கொண்டு துளசிச் செடியின் அடிப்பகுதியில் ஒரு ரூபாய் நாணயத்தைப் புதைத்து வைக்கலாம்.
இவ்வாறு புதைத்த பிறகு தினமும் துளசி செடிக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்வது அவசியம். அதோடு தொடர்ந்து நாம் செடியை மனதார பராமரித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |