தளபதி விஜய் திருச்செந்தூர் சென்றதால் வந்ததா சிக்கல்? ஜோதிடம் சொல்வது என்ன?
தற்பொழுது தமிழகத்தில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்து இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில் யார் ஆட்சி அமைக்க போகிறார் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் கொடுத்திருக்கிறது.
அப்படியாக, அதிக அளவில் வாக்குகளை பெற்ற தலைவர் விஜய் அவர்கள் தான் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்ற நேரத்தில் கடைசி நிமிடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கைகளுக்கு வராத நிலையை தான் நாம் பார்க்க முடிகிறது. பலரும் தளபதி விஜய் அவர்களின் ஜாதகத்தை பார்த்து நிறைய கணிப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ஐபிசி பக்தியில் மார்ச் மாதமே விஜய் ஆட்சிக்கு வருவார் என்று கணித்து சொன்ன ஜோதிடர் ராம்ஜி அவர்கள் தற்பொழுது விஜய் ஆட்சிக்கு வருவாரா என்பதை பற்றி நம்மோடு விளக்கமாக கூறுகிறார். அதை பற்றி பார்ப்போம்.
சமீப காலத்தில் விஜய் அவர்கள் திருச்செந்தூர் பயணம் சென்று விஸ்வரூப தரிசனம் செய்து வந்ததை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் அவருடைய ஜாதக அமைப்பின்படி விஜய் அவர்கள் திருச்செந்தூருக்கு சென்ற விஸ்வரூப தரிசனம் செய்ததுதான் அவருக்கு இந்த காலகட்டங்களில் பாதகமாக அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஒருவருடைய ஜாதக அமைப்புகள் படி அவர்கள் ஒவ்வொரு கோயில்களுக்கு செல்லும் பொழுது அவர்களுடைய கிரக நிலைகள் செயல்பட தொடங்கும். அந்த வகையில் விஜய் அங்கு சென்று வழிபாடு செய்ததால் அவர்களுக்கு எதிரிகள் பலமாகுகிறார்கள்.
எதிரிகளை வீழ்த்தக்கூடிய ஜாதக அமைப்பு கொண்டவர் விஜய் என்றாலும் தவிர்க்கவே முடியாத அளவிற்கு எதிரிகள் விஜயை சூழக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், கரூர் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் 41 உயிர்கள் உயிரி இழந்தார்கள்.
இந்த இழப்பிற்கு விஜய் அவர்கள் கட்டாயம் பரிகாரம் செய்தால் மட்டுமே அவர் ஆட்சி அமைக்க கூடும் என்றும் ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது. மேலும், விஜய் ஆட்சி அமைத்தால் இருக்கும் சிக்கலை என்னவென்று ஜோதிட ரீதியாக இந்த காணொளியில் பார்ப்போம்.