பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு.. ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள் என்ன?
உலகில் முதல் முதலில் தோன்றிய சிவன் ஆலயம் என்று போற்றக்கூடிய உத்தரகோசமங்கைகயில் ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும். மேலும், இங்கு ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் தான் சிவபெருமான் சந்தன காப்பு களையப்பட்டு அவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
அதனால் இந்த ஒரு நன்னாளில் மட்டுமே நாம் அவரை மரகத திருமேனியுடன் தரிசனம் செய்ய முடியும். அபஷேகம் முடிந்து பிறகு மீண்டும் அவருக்கு சந்தன காப்பு சாற்றப்படும். இந்த தரிசனத்தை காணக்கூடிய வாய்ப்பு மற்றும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
இந்த நாளில் நடராஜரை மரகத திருமேனியுடன் பார்த்து தரிசிப்பவர்களுக்கு கோடி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அப்படியாக ஆருத்ரா தரிசனம் எனப்படும் இந்த தரிசனம் உருவானதற்கு பின்னால் இருக்கக்கூடிய கதை என்ன?
இந்த நன்னாளில் நாம் கலந்து கொண்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் என்ன என்பதைப் பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |