ஜாதகத்தில் வாஸ்து பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்
வாஸ்து நம் வாழ்வியலோடு மிகுந்த தொடர்பு கொண்டது. அதாவது, நம்முடைய ஜாதகத்திற்கு ஏற்ப சரியான இடத்தில் நாம் வாஸ்து பார்த்து அமர வேண்டும். இல்லையென்றால் நம்முடைய வாழ்வில் மிகுந்த சிக்கலை சந்திக்கக்கூடும்.
இயல்பாகவே ஒரு வீடு என்றால், அவை முறையாக வாஸ்து பார்த்து அறைகள் எல்லாம் அமைக்கவேண்டும். அப்பொழுது தான் நாம் இடத்தில் அமரும் பொழுது நேர்மறை எண்ணங்கள் நம்மை சூழும்.
அல்லது பல சிக்கல்கள் நம் வாழ்வில் சந்திக்க நேரிடலாம். வாஸ்துவிற்கும் நம்முடைய எண்ண அலைகளுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தாலும், வாஸ்து சரி இல்லாத இடத்தில் அமரும் பொழுது நம்முடைய சிந்தனை திறன் குறைந்து காணப்படுவதைப் பார்க்கலாம்.
வியாபாரத்தில் செழிப்பாக இருந்தவர்கள் கூட வாஸ்து சரி இல்லாமல் நஷ்டத்தை சந்தித்தவர்கள் ஏராளம். அப்படியாக, நாம் வாஸ்து பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
அவ்வாறு வாஸ்து பிரச்சனை இருந்தால் நாம் என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று வாஸ்து பற்றிய பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணாதேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |