நினைத்ததை நடக்கச்செய்யும் வைகுண்ட ஏகாதசி- ஏழுமலையான் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு
மார்கழி மாதமே தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதம்.அப்படியாக இன்று பெருமாளின் மிகவும் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி நாளாகும்.அதனை அடுத்த பெருமாளின் சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருப்பதி,ஸ்ரீரங்கம் மற்றும் அனைத்து வைணவ ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்க பட்டது.
அபயம் என்று கூப்பிட்ட குரலுக்கு வைகுண்டத்தில் இருந்து நம்மை காப்பாற்ற ஓடோடி வருவார் திருமால்.பெருமாளை நினைத்து வேண்டுதல் வைக்க அவர் நிச்சயம் பக்தனுக்காக இறங்கி வந்து அருள் புரிவார்.
மேலும் அவரின் இந்த சிறப்பு நாளான வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோயிலுக்கு சென்று சொர்க்க வாசல் தரிசனம் செய்து வழிபாடு செய்ய நமக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்பபடுகிறது.மேலும்,வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 12.45 மணிக்கு ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்கவாசலில் பிரவேசித்து எழுந்தருளினார்.சொர்க்க வாசல் திறந்த கணமே பக்தர்கள் பூரிப்பில் "கோவிந்தா கோவிந்தா" என்று கோஷம் எழுப்பி தங்கள் பக்தியை வெளிப்பாடு செய்தினர்.
பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து விட்டு சொர்க்க வாசல் வழியாக சென்றதை மிக பெரிய பாக்கியமாகக் கருதினர். இந்த சொர்க்க வாசல் திறப்பை அடுத்து திருமலையே மிக பிரமாண்டமாக காட்சி அளித்தது.
இதை தொடர்ந்து,வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இங்கு அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |