நாளை(15-05-2025) வைகாசி 1 வீட்டில் செய்யவேண்டிய வழிபாடு

By Sakthi Raj May 14, 2025 09:11 AM GMT
Report

 வைகாசி மாதம் தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதம் ஆகும். இது விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் நாம் பெருமாள் வழிபாடு செய்வதால் நமக்கு வாழ்க்கையில் மிக சிறந்த புண்ணியம் கிடைக்கிறது.

அதாவது, வாழ்க்கையில் நாம் எந்த ஒரு காலத்திலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக நாளை பெருமாள் வழிபாடு செய்யலாம். அதோடு மிக முக்கியமாக நாம் பெருமாள் வழிபாட்டை முடித்து வீடு திரும்பும் பொழுது இந்த 5 பொருட்களை வாங்கி வந்தால் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.

நாளை(15-05-2025) வைகாசி 1 வீட்டில் செய்யவேண்டிய வழிபாடு | Vaikasi 1 Perumal Valipadu In Tamil

விஷ்ணு பத்தி புண்ணிய காலம். வைகாசி 1ஆம் தேதி, நாளைய தினம் நள்ளிரவு 1:00 மணிக்கே துவங்கி, காலை 10:30 மணி வரை விஷ்ணு உற்பத்தி புண்ணிய காலம் இருக்கும். இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாட்டை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது நன்மை வழங்கும்.

ஜோதிடர் ஷெல்வியின் 12 ராசிகளுக்கான குரு பெரியர்ச்சி பலன்கள்

ஜோதிடர் ஷெல்வியின் 12 ராசிகளுக்கான குரு பெரியர்ச்சி பலன்கள்

அதோடு நாளை பெருமாள் கோயிலுக்கு சென்று அங்கு பெருமாளை வழிபாடு செய்த பிறகு கொடிமரத்தோடு சேர்த்து பெருமாளை 27 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நாளை(15-05-2025) வைகாசி 1 வீட்டில் செய்யவேண்டிய வழிபாடு | Vaikasi 1 Perumal Valipadu In Tamil

மேலும், நாம் வழிபாட்டை முடித்து வீட்டிற்கு வரும் பொழுது வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம், மல்லிகைப்பூ, முடிந்தால் தாமரைப்பூ, வாழைப்பழம், டைமண்ட் கல்கண்டு, கல் உப்பு இந்த பொருட்களை எல்லாம் வாங்கி வந்து பூஜையறையில் வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய நம்முடைய குடும்பத்தில் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் விலகும்.

அதோடு நாம் விஷ்ணு பதி புண்ணிய காலத்தில் நாம் பெருமாளிடம் என்ன வேண்டுதல் வைகின்றமோ அவை நிச்சயம் நிறைவேறும் என்பது தீராத நம்பிக்கை. வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. அடுத்தது ஆவணி மாதம் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும்.

இவ்வாறு ஒரு வருடத்தில் வரக்கூடிய 4 விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் எவர் ஒருவர் பெருமாளை இடைவிடாது வழிபாடு செய்கிறார்களோ நிச்சயம் அவர்களுக்கு பெருமாளின் அருளால் வாழ்க்கை சிறந்து விளங்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US