ரிஷபத்தில் சூரியன்- 12 ராசிகளுக்கு சாதகமா அல்லது பாதகமா?
ஜோதிடத்தில் ராஜாவாக இருக்கக்கூடியவர் சூரியபகவான். இவர் சிம்ம ராசியின் அதிபதி ஆவார். அப்படியாக, சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் அவர் தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். சித்திரை மாதம் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆன சூரிய பகவான் வைகாசி மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
அதாவது நாளை வைகாசி மாத பிறப்பில் மே 15 ஆம் தேதி அதிகாலை 12.20 மணிக்கு ரிஷப ராசிக்கு செல்ல உள்ளார். இந்த சூரியனின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் ஒரு வித மாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் நாளை நடக்க இருக்கும் சூரியன் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு சாதகமாக அமைய போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
சூரியனின் இடமாற்றம் மேஷ ராசிக்கு நிதி நிலையில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அதை சமாளிக்கும் திறன் பிறக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
ரிஷபம்:
சூரியனின் இடமாற்றம் ரிஷப ராசிக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பை தேடி கொடுக்கும். மனதில் தைரியமும் தெளிவும் பிறக்கும்.
மிதுனம்:
சூரியனின் இடமாற்றம் மிதுன ராசிக்கு தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் நல்ல தீர்வை பெறும். பழைய முதலீடுகளில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள்.
கடகம்:
சூரியனின் இடமாற்றம் கடக ராசிக்கு மனதில் தெம்பும் உற்சாகமும் கொடுக்கும். பொருளாதார ரீதியாக சந்தித்த சிக்கல்கள் எல்லாம் விலகி செல்லும்.
சிம்மம்:
சூரியனின் இடமாற்றம் சிம்ம ராசிக்கு சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்பை கொடுக்க உள்ளது. தங்களின் கடின உழைப்பால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
கன்னி:
சூரியனின் இடமாற்றம் கன்னி ராசிக்கு படிப்பில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சுற்றுலா பயணம் செல்வீர்கள்.
துலாம்:
சூரியனின் இடமாற்றம் துலாம் ராசிக்கு வேலையில் நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கும். வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும்.
விருச்சிகம்:
சூரியனின் இடமாற்றம் விருச்சிக ராசிக்கு காதல் வாழ்க்கையில் சிறந்த பலனை கொடுக்க உள்ளது. பெற்றோர்கள் உடல்நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.
தனுசு:
சூரியனின் இடமாற்றம் தனுசு ராசிக்கு மனதளவில் நேர்மறை சிந்தனையை கொடுக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் யோகம் உண்டாகும்.
மகரம்:
சூரியனின் இடமாற்றம் மகர ராசிக்கு வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதலை கொடுக்க உள்ளது. நீண்ட நாட்களாக சந்தித்த சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள்.
கும்பம்:
சூரியனின் இடமாற்றம் கும்ப ராசிக்கு அலுவலகத்தில் பதவி உயர்வை கொடுக்கும். திருமண ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மீனம்:
சூரியனின் இடமாற்றம் மீன ராசிக்கு ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வத்தை கொடுத்தாலும், வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |