வளர்பிறை, தேய்பிறை என்றால் என்ன?
நாம் வீடுகளில் எந்த சுப காரியத்தை செய்ய ஆரம்பித்தாலும் வளர்பிறையில் செய்வது வளரும் என்று வளர்பிறையிலேயே ஆரம்பிப்போம்.
தேய்பிறை என்றால் அதை தவிர்த்து விடுவோம். ஆனாலும் திருமணம் என்று வரும்பொழுது, வளர்பிறை முகூர்த்தம், தேய்பிறை முகூர்த்தம் எல்லாவற்றையும் பொதுவாக பார்த்து, அதனுடன் மணமக்களின் ஜாதகப் பொருத்தம் பார்த்து நாள் குறிப்பது வழக்கம்.
இப்படி ஜாதகத்தில் முக்கியத்துவம் அளிக்கும் வளர்பிறை, தேய்பிறை எப்படி ஏற்படுகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
சந்திரன், மகாவிஷ்ணு திருமார்பில் பிறந்தவன் என்றும், திருப்பாற்கடலை கடையும்போது பிறந்தவன் என்றும், அத்திரிக்கு அநசூயையிடம் பிறந்தவன் என்றும் கூறுவர்.
அத்திரி முனிவர் தவம் புரிய அவர் வீரியம் மேலெழுந்து கண்வழி ஒழுகிற்று. அதைப் பிரம்மன் திரட்டி விமானத்தில் விட, அது உயிர் பெற்றது. அதனை சோமன் என்றனர்.
சந்திரனுடன் தத்தாத்திரேயர், துர்வாசர் ஆகியோர் பிறந்தனர். சந்திரன் சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருந்து சோமன் என்ற பெயரும், சிவமூர்த்தியின் சடையினின்று நீங்காதிருக்கும் வாழ்வும் அடைந்தான்.
இது கார்த்திகை மாதம் திங்கட்கிழமை நிகழ்ந்ததால், கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் காலையில் ஸ்நானம் முதலியன செய்து சிவபூஜை முடித்து வேதிய தம்பதிகளைச் சிவமூர்த்தியாகவும் பிராட்டியாகவும் பாவித்து பூஜை முடித்து, அவர்களுக்கு அன்னம் முதலியன உதவி.
சிவமூர்த்திக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் முதலியன நடத்தி உபவாசம் இருத்தல் நலம். பூமி சூரியனையும், சந்திரன் பூமியையும் சுற்றி ஓடுவதால் வளர்பிறை, தேய்பிறை மாதங்கள் ஏற்படுகின்றன.
உண்மையில் சந்திரன் வளர்வதும் இல்லை; தேய்வதும் இல்லை. சூரிய வெளிச்சம் குறைவாகப்படுவது தேய்பிறை. சூரிய வெளிச்சம் அதிகம் படுவது வளர்பிறை.
சந்திரன் பூமியைச் சுற்றிவர 291/2 நாட்கள் ஆகின்றன. பூமி தன்னைத்தானே சுற்றும்போது சந்திரன் தன் ஸ்தானத்தை விட்டு 12 டிகிரி நகருகிறது. ஆதலால், இதன் உதயம் பிற்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |