வரலட்சுமி விரதம் அன்று இந்த 6 விஷயங்கள் செய்வதால் கட்டாயம் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்
இந்து மதத்தில் நாம் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிக முக்கியமான விரதமாக வரலட்சுமி விரதம் இருக்கிறது. பெண்கள் தவறாமல் கடைப்பிடிக்கக்கூடிய விரதங்களில் இந்த வரலட்சுமி விரதமும் ஒன்று.
இந்த ஆண்டு வரலட்சுமி விரதமானது வருகின்ற ஆகஸ்ட் 08ம் தேதி வருகிறது. அதாவது, ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அப்படியாக, அந்த நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது குறிப்பிட்ட இந்த 6 விஷயங்களை செய்வதால் மகாலட்சுமி தாயாரின் முழு அருளை நாம் பெற முடியும் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
1. வரலட்சுமி விரத நாளில் நாம் கட்டாயம் மகாலட்சுமியின் தாயாரின் 108 திருநாமங்களான லட்சுமி அஷ்டோத்திர சதநாமாவளியை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை மஹாலட்சுமி தாயாரின் திருஉருவ படத்திற்கு முன்பாக நெய் விளக்கை ஏற்றி சொல்லி வழிபாடு செய்யவேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது நம் வீடுகளில் உள்ள பொருளாதார கஷ்டங்கள் விலகி செல்வ செழிப்பு உண்டாகிறது. மேலும், இந்த நாமத்தை நாம் தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தாலும் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
2. மஹாலட்சுமி தாயாருக்கு மிக விருப்பமான இரண்டு பொருட்களில் குங்குமம் மற்றும் தாமரை பூக்கள் உள்ளது. அதனால், அன்றைய தினம் தாமரை பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் மஹாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து நமக்கு ஆசீர்வாதம் வழங்குகின்றாள்.
3. அதோடு வீடுகளில் வரலட்சுமி விரத நாளில் அரிசி பாத்திரத்தில் வெள்ளி நாணயங்கள் அல்லது சிறிய லட்சுமி விக்ரத்தை வைத்து வழிபாடு செய்யலாம். இதனால், வீடுகளில் உணவு பஞ்சம் ஏற்படாமல் நம் தலைமுறையினர் செல்வ செழிப்போடு வாழ்கிறார்கள்.
4. அதோடு, மிக முக்கியமாக இன்றைய நாளில் நாம் கோயில்களுக்கு பசும் நெய்யுடன் சேர்த்து நாம் விளக்குகளை தானம் செய்யலாம். நாம் தீப தானம் செய்யும் பொழுது நம் வீடுகளில் இருள் விலகி குடும்பத்தின் கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகிறது.
5. தானங்களில் எப்பொழுதும் சிறந்த தானமாக பசு தானம் உள்ளது. எவர் ஒருவர் பசு தானம் செய்கிறார்களோ அவர்களின் 16 தலைமுறையினருக்கும் மஹாலட்சுமி தாயாரின் அருள் இருப்பதாக சொல்கிறார்கள். அன்றைய தினம் கோயில்களுக்கு பசு தானம் கொடுப்பதால் நமக்கு மிக சிறந்த நன்மை கிடைக்கிறது.
6. சிலர் வரலட்சுமி விரத நாளில் வீடுகளில் கலசம் வைத்து வழிபாடு செய்வார்கள். நாம் அன்றைய தினம் கலசத்தை சுற்றி எட்டு வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை வைக்க வேண்டும். இந்த நாணயங்கள் அஷ்ட லட்சுமிகளின் அம்சமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நமக்கு அஷ்ட லட்சுமிகளின் பரிபூர்ண அருளும் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







