இந்த வாஸ்து முக்கியம் - தவறினால் கணவன் மனைவி விவாகரத்து உறுதி
சில வாஸ்து தவறுகள் கணவன் மனைவிக்குள் தொடர்ந்து சண்டை சச்சரவை ஏற்படுத்தும். பிறகு இறுதியில் விவாகரத்திற்கு வழிவகுக்கும். சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் விவாகரத்து ஏற்படுவதை தடுக்கும் முடியும்.
விவாகரத்து
வாஸ்து சாஸ்திரத்தின் படி வடகிழக்கு திசையில் தலையை வைத்து தூங்குவது நல்லதல்ல. இது புனிதமான திசையுடன் தூக்கத்தின் ஆற்றலுடன் முரண்படும். இதனால் மன அழுத்தம், உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் வடக்கு திசையில் படுக்கையில் இருப்பது விவாகரத்திற்கு வழிவகுக்கும்.

அதேபோல், தெற்கு திசை ஒருபோதும் இருட்டாக இருக்கக் கூடாது. தெற்கு திசையில் இருள் இருந்தால் உறவில் விரிசல் ஏற்படும். மேலும், படுக்கை அறையில் முட்கள் நிறைந்த செடி, உடைந்த மின்விசிறி, பிரிட்ஜ் போன்றவை இருக்க கூடாது. அவை உறவுகளை பாதிக்கும். சில சமயம் விவாகரத்திற்கு வழிவகுக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரம்
வீட்டின் வடகிழக்கு மூலை எப்போதும் எடை குறைந்ததாக, காற்றோட்டம் உள்ளதாக நீலம் அல்லது பர்பிள் நிற கொண்டதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தம்பதிகளுக்குள் மனத்தெளிவை ஏற்படுத்துவதுடன், நல்ல புரிதை ஏற்படுத்தும்.

இரண்டு கட்டில்களை ஒன்றாக சேர்த்து போடுவது, இரண்டு படுக்கைகளை ஒன்றாக வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
படுக்கைக்கு எதிராக கண்ணாடியை வைக்கக் கூடாது. இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவதுடன் சோர்வு, குறைவான எனர்ஜி ஆகியவை ஏற்படும்.