நிதி நிலைமையை உயர்த்தும் செம்பருத்தி செடி; எங்கு நடலாம்?
பொதுவாகவே ஒருவருடைய வீட்டில் நிதி நிலைமை பிரச்சினை என்பது அடிக்கடி வந்துக்கொண்டே இருக்கும்.
ஒரு சிலர் வாஸ்து முறைப்படி ஒரு சில விடயங்களை செய்து அதை நிவர்த்தி செய்வார்கள். அந்தவகையில் வீட்டில் நிதி நிலைமையை மேம்படுத்தும் செம்பருத்தி பூவை எந்த திசையில் நட்டு வைக்கலாம் என பார்க்கலாம்.
செம்பருத்தி செடி
வாஸ்து சாஸ்திரத்தின் படி செடி கொடிகளை நடுவதன் மூலம் பல வகையான நன்மைகளை பெற முடியும். அதில் ஒன்று தான் இந்த செம்பருத்தி செடி. இது உடலுக்கு மட்டுமல்லாமல் வாஸ்து முறைக்கு பல நன்மையை வழங்கி வருகிறது. இவ்வாறு பல நன்மையை வழங்கி வரும் செம்பருத்தி செடியை இருக்கும் இடத்தில் எல்லாம் நட்டு வைக்க கூடாது.
இதற்கு என்று இருக்கும் குறிப்பிட்ட திசையில் இந்த செடியை நட்டு வைத்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
வீட்டில் செம்பருத்தி செடியை கிழக்கு திசையில் நட்டு வைக்கலாம். வறுமையானது வீட்டில் வரவேகூடாது என்று நீங்கள் நினைத்தால் வீட்டின் கிழக்கில் செம்பருத்தி செடியை நடலாம்.
எந்த கடவுளுக்கு இந்த பூ பிடிக்கும்?
செம்பருத்தி பூக்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே தான் இந்த பூவை லட்சுமி தேவியின் மறு உருவமாகவும் பார்க்கின்றார்கள். இதை வைத்து வீட்டில் வழிப்படுவதன் மூலம் வீட்டில் நிதி நிலைமை அதிகரிக்கும்.