வாஸ்து: இந்த மாதத்தில் மட்டும் தவறியும் வீடு கட்ட தொடங்காதீர்கள்
நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் நிறைய ஆசைகள் இருக்கும். அதில் ஒன்று, தான் எப்படியாவது உழைத்து சொந்த வீடு கட்டிட வேண்டும் என்பது. அப்படியாக, அந்த வீடு கட்டுவதற்கு முன்னால் நாம் வாஸ்து நாள் எல்லாம் பார்த்து தான் கட்டுவோம்.
இருந்தாலும் அதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது தான் நாம் வீடு கட்டும் மாதம். அதாவது நாம் எந்த மாதத்தில் வீடு கட்டுகின்றோம் என்பதும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அப்படியாக, 12 மாதங்களில் எந்த மாதம் வீடு கட்ட தொடங்கினால் என்ன பலன் என்று பார்ப்போம்.
சித்திரை:
இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் வீண் விரையம் உண்டாகும்.
வைகாசி:
இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் ஜெயம் உண்டாகும்.
ஆனி:
இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் மரண பயம் ஏற்படும்.
ஆடி:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது கால் நடைகளுக்கு சில பாதிப்புகள் உண்டாகும்.
ஆவணி:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது குடும்பத்தின் ஒற்றுமை மேம்படும்.
புரட்டாசி:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது நோய் நொடி விலகி ஆரோக்கியம் மேம்படும்.
ஐப்பசி:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது குடும்பத்தில் கலகம் உண்டாகும்.
கார்த்திகை:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது மகாலட்சுமியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
மார்கழி:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது தொடங்கிய வேலை பாதியில் நிற்கும் நிலை உண்டாகும்.
தை:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது கடன் சுமை அதிகரிக்கும்.
மாசி:
இந்த மாதத்தில் வீடு கட்டும் பொழுது சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
பங்குனி:
இந்த மாதம் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணினாலே கட்டுவது மிகவும் கடினம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |