வாஸ்து: தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா ? செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்

By Sakthi Raj May 01, 2026 10:43 AM GMT
Report

 ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காரணம் நாம் அமைந்து இருக்கக்கூடிய திசைதான் பல நேரங்களில் நமக்கு நடக்கின்ற நன்மை தீமைகளை தீர்மானிக்கிறது. அப்படியாக, வாஸ்துவில் தெற்கு திசை என்பது எமன் மற்றும் சனி பகவான் செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடையது.

இந்த திசை கட்டுப்பாடு, சக்தி நிலை தன்மைக்கான அடையாளமாகவும் விளங்குகிறது. எனவே மற்ற திசைகள் போல் அல்லாமல் இந்த திசையை நாம் மிகச் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே அதற்குரிய பலன்களை பெறலாம்.

அப்படியாக தெற்கு பார்த்த வீட்டில் பிரதான வாசல் தெற்கு திசையில் தென்கிழக்கு பகுதியில் இருப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

வாஸ்து: தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா ? செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் | Vastu Tips For South Facing Home To Attract Luck

தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமாம்.. குரு பகவானின் இந்த அதிர்ஷ்ட கல் அணியுங்கள்

தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமாம்.. குரு பகவானின் இந்த அதிர்ஷ்ட கல் அணியுங்கள்

இந்த இடத்தை "தன பிரவேசம்" என்று அழைப்பார்கள். அதாவது செல்வம் பெற்றுக் கொடுக்கக் கூடிய இடம் என்று பெயர். அதனால் இந்த பிரதான வாசலை நாம் அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

வாசலில் தெய்வீக அம்சமாக போற்றக்கூடிய ஸ்வஸ்திக் சின்னம், சுபலாபம் மற்றும் விநாயகர் படம் வைப்பது நமக்கு நன்மையை அளிக்கும். மேலும், நம் வீடுகளில் சமையலறையை நெருப்புக்கு உரிய திசையான தென்கிழக்கு திசையிலே வைக்க வேண்டும். சமைக்கும் போது கிழக்கு திசையை பார்த்து சமைப்பது நல்லது.

அதை போல் படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருப்பது நல்லது. பூஜை அறையை வடைகிழக்கு திசை அதாவது ஈசான மூலையில் இருப்பது மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும். சுவாமி சிலைகள் மேற்க்கு அல்லது வடக்கு திசையை பார்த்து வைத்திருக்க வேண்டும்.

வாஸ்து: தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா ? செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் | Vastu Tips For South Facing Home To Attract Luck

2026: ரிஷப ராசியில் குரு சூரியன் சேர்க்கை.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார்

2026: ரிஷப ராசியில் குரு சூரியன் சேர்க்கை.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார்

பலரும் சில நேரங்களில் வாஸ்து சரியாக பார்த்து அமைத்து இருக்க மாட்டார்கள். ஒருவேளை தெற்கு திசையில் வாஸ்து தோஷம் இருந்தால் நீங்கள் எளிய பரிகாரமாக பிரதான வாசல் வெளிப்பக்கம் பார்த்தது போல் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை வைத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி சனி பகவானுடைய மந்திரங்களை சொல்வது வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்யும்.

இவ்வாறு சரியான பரிகாரங்களை பின்பற்றும் பொழுது வாஸ்து ரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் விலகி அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் நிலைத்தன்மையும் கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US