கணவன் தவறு செய்தாலும் அதை மன்னித்து ஏற்கக் கூடிய மனைவியின் ராசிகள் யார் ?
ஒரு சில ராசிகளுக்கு ஒரு சில குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த வகையில் அவர்களுக்கு என்று கோட்பாடு அவர்கள் எந்த சூழ்நிலையும் விட்டுக் கொடுப்பதில்லை. அப்படியாக, ஒரு சில வீடுகளில் பெண்களை பார்த்திருப்போம்.
கணவர்களுக்காக அவர்கள் எதையும் செய்வார்கள், விட்டுக்கொடுத்து செல்வார்கள், மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில், கணவன் என்ன தவறு செய்தாலும் மன்னித்து ஏற்கக்கூடிய மனைவி ராசிகள் யார் என்று பார்ப்போம்.

கடகம்:
இவர்கள் குடும்பத்திற்காக தான் எதையும் செய்யக் கூடியவர்கள். கணவன் என்ன செய்தாலும் என்ன செய்வது குடும்பமாக ஒன்றாக வாழ வேண்டுமே என்று எண்ணி பல நேரங்களில் கணவன் செய்யக்கூடிய பல தவறுகளை இவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
துலாம்:
இவர்கள் எப்பொழுதும் எல்லோரையும் அனுசரித்துப் போகக்கூடிய ஒரு தன்மையை கொண்டவர்கள். எல்லா விஷயங்களுக்கும் நாம் பொறுத்துதான் செல்ல வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள். ஆதலால், கணவரிடம் நிறைய நேரங்களில் தவறு செய்தாலும் விட்டுக் கொடுத்து இவர்கள் அதை சரி செய்து விடுகிறார்கள்.
தனுசு:
இவர்கள் தங்களுடைய வாழ்க்கை துணையை எப்பொழுதும் தீர்க்கமாக நம்பக்கூடியவர்கள். இவர்கள் தங்களுடைய வாழ்க்கை துணை தவறே செய்ய மாட்டார்கள் என்று அவர்கள் மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை கொண்டிருப்பதால் இவர்கள் பல நேரங்களில் அவர்களுடைய வாழ்க்கை துணைக்காக சில விஷயங்கள் செய்வது உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |