வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் வாஸ்து குறிப்புகள்
ஜோதிடத்தின்படி, ஒரு கட்டடத்தைக் கட்டமைக்கும் போதும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமாகும்.
வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும்.
அந்தவகையில், வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க சில வாஸ்து குறிப்புகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாஸ்து குறிப்புகள்
தென்மேற்கு பகுதி குபேர மூலை எனக் கூறப்படுகிறது. பீரோ அல்லது பணப்பெட்டகம் போன்றவை வடக்கு திசை நோக்கி வைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வீட்டின் அழுக்கு நீர் வடிகால் வடக்கு திசை நோக்கி இருப்பது போல் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பண சேமிப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
வடகிழக்கு திசை நோக்கி வீட்டில் பூஜை அறை இருக்க வேண்டும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும், அதிகரிக்கும், உறவுகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
வீட்டில் செல்வம் அதிகரிக்கப் பச்சைக் கிளிகளின் புகைப்படங்களை வடக்கு பகுதியில் வைத்தால் செல்வம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கும் என்பதும் ஐதீகமாகும்.
வீட்டில் இருக்கும் குப்பைகளை வடக்கு பக்கத்தில் சேர்த்து வைக்கக் கூடாது. ஏனெனில் அந்த திசையானது தொழில் மற்றும் பணம் தொடர்புடையது. இதனால் தொழில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.