ராஜ வாழ்க்கை வழங்கும் வாழைத்தண்டு திரி தீப வழிபாடு
இந்து மதத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். அவ்வாறு வழிபாடு செய்வது நமக்கு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். மேலும், விளக்கேற்றிய வீடு வீண் போகாது என்ற பழமொழியும் உண்டு. அந்த வகையில் விளக்கேற்றும் போது மகாலட்சுமி நம்ம வீட்டுக்கு வருகை தந்து நமக்கு அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.
அப்படியாக விளக்கேற்றும் பொழுது நாம் நெய் அல்லது எண்ணெய் இவற்றில் ஏற்றுகின்றோம். ஆனால் திரி என்பது பல வகைகளில் இருக்கிறது. ஒவ்வொரு வகையான திரியை கொண்டு விளக்கேற்றும் பொழுது நமக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கிறது. அந்த வகையில் வாழைத்தண்டு திரி பயன்படுத்தி நம் வீடுகளில் விளக்கேற்றும் பொழுது நமக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
அந்த வகையில் வாழைத்தண்டு திரி எப்படி பயன்படுத்த வேண்டும்? அந்த திரையைக் கொண்டு நாம் விளக்கேற்றும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
நம் குடும்பத்தில் ஏதேனும் வேண்டுதல் வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறிய பிறகு நாம் தெய்வங்களுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை செய்திருப்போம். அவ்வாறு காலம் கடந்து அல்லது அந்த காரியங்கள் இறைவனின் அருளால் நிறைவேறிய பிறகு காணிக்கையை செலுத்த மறந்திருப்போம்.
இவை சமயங்களில் தெய்வக் குற்றம் ஆகி விடும். மேலும், தெய்வக் குற்றம் என்பது இறைவனை மறந்து போகுதல் ஆகும். அதாவது இறைவனை நமக்கு ஒரு காரியம் நடந்த பிறகு அந்த காரியம் நடந்ததற்கான நன்றியை நாம் செலுத்த வேண்டும்.
இல்லை என்றால் தெய்வம் அவர்கள் மறந்ததை நினைவு செய்ய ஒரு சில சங்கடங்களை, தடைகளை, பாடங்களை நமக்கு கொடுப்பார். அதைத்தான் தெய்வக் குற்றம் என்று என்கின்றோம். இவ்வாறு சில காரியங்கள் செய்ய மறந்த நேரங்களில் குடும்பத்தில் ஒரு சில தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரும்.
அவர்கள் வாழைத்தண்டு தெரியில் தீபமேற்றி வழிபாடு செய்யும்பொழுது அவர்களின் தோஷங்கள் பிரச்சனைகள் யாவும் விலகுகிறது. இந்தப் பொருள் பூஜை செய்யும் கடைகளில், அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
இந்த வாழைத்தண்டு திரியை நம் வீடுகளிலும் செய்யலாம். அதாவது வாழை தண்டு எடுத்து அதிலிருந்து கிடைக்கக்கூடிய நாரை வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது.
இந்த வாழைத்தண்டு திரியில் தீபம் ஏற்றும் பொழுது நம் வீடுகளில் ஏற்பட்ட தோஷங்களும் நம்முடைய முன்னோர்களுடைய சாபங்களும் இவை அனைத்தும் விலகும். ஆக தீபம் ஏற்றிய வீட்டில் இருள் சூழ்ந்ததாக ஐதீகம் இல்லை. ஆதலால் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். நமக்கு ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளிலிருந்து நாம் விடுதலை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







