வாரம் ஒருமுறை வாகனங்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய பூஜை
நம்முடைய வாழ்க்கையில் அன்றாட தேவைகளில் மிக முக்கிய தேவை வண்டி வாகனங்கள்.இவை இருந்தால் மட்டுமே நம்முடைய வேலை எளிதில் பூர்த்தி ஆகும்.அதாவது இவைகள் நம்முடைய குடும்பம் போல் நம்முடன் ஒன்றி இருப்பது.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய பாதுகாப்பு என்றே சொல்லலாம்.
ஏனென்றால் நாமும் நம்முடைய வாகனமும் சரியான முறையில் இருந்தாலும் எதிர் வரும் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் சில விபத்துகள் நடக்க நேர்ந்துவிடுகிறது.நாம் வீட்டை விட்டு ஓர் பாதுகாப்பாக செல்ல வாகனம் பங்கு அதிகம் உள்ளது.
அவ்வளவு முக்கியமான வாகனங்களை நாம் பராமரித்து பூஜைகள் செய்து பத்திரமாக வைத்து கொள்வது என்பது மிக முக்கியம். சிலர் இயல்பாகவே வெளியூர் செல்ல வாகனத்தை எடுத்தார்கள் என்றால் வாகனம் கீழ் எலுமிச்சை பழம் வைத்து அதன் மேல் வண்டியை ஏற்றி இறக்குவார்கள்.
இவ்வாறு செய்வதால் வாகனத்தில் எப்பேர்ப்பட்ட திருஷ்டி இருந்தாலும் விலகி விடும் என்று நம்பிக்கை. அப்படியாக வாகனம் வைத்திருப்பர்வகள் கண்டிப்பாக வாரம் ஒரு முறையாவது அதுவும் செவ்வாய்க் கிழமை அன்று கட்டாயம் வாகனங்களை சுத்தமான நீரால் சுத்தம் செய்து விபூதி குங்குமத்தால் அலங்கரித்து, வாகனங்களை வலம் வந்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்து வழிபடுவதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் அவை நம்மைக் காப்பாற்றும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது குடும்பத்தில் வாகனம் என்பது ஒருவரை ஒன்று சார்ந்து இருப்பது.ஆதலால் அதை பராமரித்து பூஜை செய்து வைத்து நாமும் நம்முடைய குடும்பத்தாரும் வரும் ஆபத்துகளில் இருந்தது காப்பாற்ற பட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |