ஒருவர் ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கிறது. அந்த 12 கட்டங்களும் ஒவ்வொரு ராசிக்குரிய கட்டங்களாகவும் ஒவ்வொரு நவகிரகங்களுக்குரிய அதிபதியாகவும் உள்ளது. அப்படியாக ஒவ்வொரு கட்டமும், அந்த கட்டத்தில் இருக்கக்கூடிய கிரகங்களும் நம்மை பற்றி நம் வாழ்க்கையை பற்றி நமக்கு நிறைய விஷயங்கள் சொல்கிறது.
அதாவது ஒருவர் ஜாதகத்தில் 11ஆம் இடம் ஒருவரைப் பற்றி சொல்லும் தகவல் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஜாதகத்தில் பிற கட்டங்கள் வைத்து நம்மை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் 11 ஆம் இடம் தான் நம் நட்புகள், சமுதாயத்தில் நம் பழக்க வழக்கங்கள், நம்முடைய எதிர்கால சிந்தனைகளை பற்றி கூறுகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பதினோராம் இடம்தான் ஒரு ஜாதகர் எப்பேர்ப்பட்ட நண்பர்கள் கூட்டத்தில் வாழக்கூடிய நபர்கள் என்பதை பற்றி சொல்கிறது. அப்படியாக ஒருவருடைய 11 ஆம் இடம் மேஷ ராசியில் இருந்தால் அவர்களுடைய நண்பர்கள் அந்த ஜாதகரை வளர்ச்சிக்கான பாதையை நோக்கி செல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுப்பார்கள்.
அதுவே 11ஆம் இடம் சிம்ம ராசியில் இருக்கும் பொழுது அந்த ஜாதகர் மிகவும் நம்பிக்கையான நபராகவும் தங்களுடைய நண்பர்களுடைய வெற்றியை கொண்டாட கூடிய நபராகவும் அவர்களுடைய நண்பர்கள் கூட்டமே தனித்துவமாக காணப்படுவார்கள்.
ஒருவருக்கு 11ஆம் தனுச ராசியில் இருக்கும் பொழுது அவர்களுடைய எண்ணங்களும் இந்த சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய பார்வையும் பரந்து விரிந்ததாக இருக்கக் கூடியதாக இருக்கும். அதாவது இவர்கள் தத்துவம் சார்ந்த விஷயங்களை பேசக்கூடிய நண்பர்களை அவர்கள் அருகில் வைத்துக் கொள்வார்கள்.
ஒருவருக்கு 11 ஆம் இடம் ரிஷப ராசியில் இருக்கும் பொழுது அவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் சமுதாயத்தில் தனித்து நிற்க வேண்டும் என்பதற்காக சில ஆடம்பர செலவுகளை செய்யக்கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்கள் சொகுசு வாழ்க்கையை வாழக்கூடிய நண்பர்கள் வட்டத்தில் வாழும் நிலை இருக்கும்.
ஒருவருக்கு 11ஆம் இடம் கன்னி ராசியில் இருக்கும் பொழுது அவர்களுடைய நண்பர்கள் கூட்டம் சுயநலமற்ற கூட்டமாக இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் உதவக் கூடிய தன்மையை பெற்றெடுப்பார்கள்.
மேலும் ஒருவருடைய 11 ஆம் இடம் மகர ராசியில் இருக்கும் பொழுது நண்பர்களும் இவர்களும் அவர்களுடைய குறிக்கோளை நோக்கி பயணம் செல்லக்கூடிய நபர்களாக இருப்பார்கள். அதாவது நண்பர்கள் இவர்களுக்கு உதவியதாகவும் இவர்கள் நண்பர்களுக்கு உதவியாகவும் இருக்கக்கூடிய தன்மை உருவாக்கும்.
ஒருவருக்கு 11ஆம் இடம் மிதுன ராசியில் இருக்கும் போது அவர்கள் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கோடு வாழக்கூடிய தன்மையை பெற்றிருப்பார்கள். இவர்களை சுற்றிலும் எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
ஒருவருக்கு 11ஆம் இடம் துலாம்ராசியில் இருக்கும் பொழுது அவர்கள் ஒரு சமநிலையோடு வாழக்கூடிய தன்மையை பெற்றிருப்பார்கள். இவர்களுடைய நண்பர்களும் இவர்களைப் போலவே ஒரே சிந்தனையை வைத்திருக்கக்கூடிய நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரும் அமைதியை விரும்பக்கூடிய நபராக விளங்குவார்கள்.
ஒருவருக்கு 11 ஆம் இடம் கும்ப ராசியில் இருக்கும் பொழுது நண்பர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நபராக இருப்பார்கள். மேலும் கடக ராசியில் ஒருவருடைய 11 ஆம் இடம் அமையப்பெற்றிருக்கும் பொழுது அவர்கள் நண்பர்கள் கூட்டத்தை எப்பொழுதும் பாதுகாப்பாகவும் அரவணைப்போடும் வைத்திருக்கக்கூடிய நபராக இருப்பார்கள். இவர்களுடைய நண்பர்களும் இவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்து செயலாற்றக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒருவருக்கு 11 ஆம் இடம் மீன ராசியில் அமைய பெற்றிருக்கும் பொழுது அவர்கள் எப்பொழுதும் தன்னுடைய நண்பர்களுக்கு துணையாக நிற்பார்கள். அவர்களுடைய நண்பர்களை தன் வாழ்க்கையில் உயர்த்தி விடுவதற்கான அனைத்து வேலைகளையும் இவர்கள் செய்யக்கூடிய நபராக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







