பிரபல பாடகர்கள் மெய்சிலிர்க்க பாடிய சக்தி வாய்ந்த வேல் மாறல்
முருகப்பெருமானை நினைத்து உருகிட நடக்காத காரியம் என்று எதுவும் இல்லை.அப்படியாக எவ்வளவு மனமுருகி முருகப்பெருமானை நினைத்து வேண்டுதல் வைத்தாலும் அவருக்குரிய பாடல்கள் பாடி வழிபாடு செய்ய நிச்சயம் நம்முடைய தோஷங்கள் யாவும் விலகும் என்று உண்மையாக அனுபவித்து சொல்கிறார்கள் பக்தர்கள்.
பலருக்கும் முருகனுடைய பாடல்களை மந்திரங்களை புத்தகம் பார்த்து படிக்க சரியான நேரம் கிடைப்பதில்லை.அதை மிகவும் பெரிய மெனக்கிடலாக பார்க்கிறார்கள்.அவர்கள் கட்டாயம் முருகனுடைய பாடல்களை கேட்பது நன்மையை தரும்.அதாவது ஒரு மந்திரம் சொல்லி கிடைக்கும் பலன் கேட்பதாலும் பெற்று விடலாம்.
அப்படியாக முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த வேல் மாறல் பலரையும் காக்கும் கவசமாக விளங்கிவருகிறது.அதாவது வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அந்த முருகன் அருளால் காரிய தடை முன்னேற்றம் கிடைக்கும்.
அப்படியாக அதை பலரும் எளிதாக கேட்க முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசம் ஸ்பெஷலாக ஐபிசி பக்தியுடன் இணைந்து பிரபல பாடகர்கள் சுர்முகி மற்றும் சாய் விக்னேஷ் பாடிய வேல்மாறல் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது.அதை அனைவரும் கேட்டு முருகன் அருளால் மனமகிழ்ச்சியோடு வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |