தங்களை எப்பொழுதும் வில்லனாகவே காட்டிக்கொள்ளும் 3 ராசிகள்

By Sakthi Raj Dec 27, 2025 07:09 AM GMT
Report

மனிதர்களுடைய வாழ்வு அவர்களை அறியாமலே அவர்களுடைய பிறந்த ராசியின் குணாதிசயங்கள் கொண்டு இருக்கும். அப்படியாக ஒரு சில ராசியினர் வெளியே பார்ப்பதற்கு மிகவும் தைரியமானவர்களாகவும் யாரும் அவர்களை அசைக்க முடியாதது போலும் காட்சியளிப்பார்கள்.

ஆனால் உண்மையில் இவர்கள் அவ்வளவு வலிமையானவர்கள் அல்ல. மனதளவில் மிகவும் பயந்த குணம் கொண்டவர்கள். அப்படியாக எந்த ராசியினர் வெளியே தங்களை வலிமையாக காட்டி நடித்துக் கொள்ளக்கூடிய ராசியினர் என்று பார்ப்போம்.

தங்களை எப்பொழுதும் வில்லனாகவே காட்டிக்கொள்ளும் 3 ராசிகள் | 3 Zodiac Who Shows Strong Outside But They Are Not

இந்த தேதியில் பிறந்தவர்கள் யார் பேச்சையும் கேட்கமாட்டார்களாம்

இந்த தேதியில் பிறந்தவர்கள் யார் பேச்சையும் கேட்கமாட்டார்களாம்

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு மிகவும் தைரியசாலியாகவும் அறிவாளியாகவும் இருப்பார்கள். ஆனால் மனதளவில் இவர்கள் எதற்கெடுத்தாலும் மிகவும் பயந்த குணம் கொண்டவர்கள். அதாவது ஒரு சிறிய பிரச்சனை என்றால் கூட இவர்கள் மனமானது அதிக அளவில் சிந்தித்து பயப்பட தொடங்கிவிடும். அதேபோல் இவர்களால் தனியாக எந்த ஒரு காரியத்தையும் சமாளித்து செயல்பட முடியாத நிலை இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியை பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு விதமான ஒரு பொறாமை உண்டாகும். அதற்கு காரணம் அவர்களுடைய வெளித்தோற்றம். எப்பொழுதும் அவர்கள் தங்களை ஒரு வில்லனாகவே காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். கோபம் கொள்வார்களே தவிர்த்து மனதார ஒருவருக்கு துரோகமும் ஒருவரை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடம் இருக்காது.

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு துன்ப காலம் எப்பொழுது முடிவிற்கு வரும்?

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு துன்ப காலம் எப்பொழுது முடிவிற்கு வரும்?

கன்னி:

கன்னி ராசியினரிடம் யாரும் அவ்வளவு எளிதாக பேச முடியாத நிலை இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய தோற்றமானது இவர்களை அவ்வளவு எளிதாக யாரும் நெருங்கி விட முடியாது என்ற ஒரு அமைப்பில் இருக்கும். ஆனால், இவர்கள் சிறிய பிரச்சனை என்றால் கூட இவர்கள் அதிக அளவில் யோசித்து என்னால் இதை சமாளித்து கடந்து விட முடியுமா என்ற ஒரு பயம் கொண்டிருப்பார்கள். ஆக இவர்களுடைய தோற்றத்திற்கும் இவர்களுடைய எண்ணத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US