இந்த தேதியில் பிறந்தவர்கள் யார் பேச்சையும் கேட்க்கமாட்டார்களாம்
நம்மை சுற்றி மற்றும் நமக்கு தெரிந்த ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் யாருடைய சொல்லையும் அவ்வளவு எளிதாக கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு பாதை வகுத்து அதில் பயணம் செய்வார்கள். இது சமயங்களில் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கக் கூடியதாக அமையும்.
ஒரு சிலருக்கு பிறருடைய நல்ல கருத்துக்களையும் கேட்க முடியாத நிலை வருவதால் இவர்கள் வாழ்க்கையில் பல இடங்களில் துன்பங்களை சந்திக்கக்கூடிய அமைப்பு உருவாகிறது. இதற்கெல்லாம் இவர்கள் பிறந்த தேதியும் ஒரு காரணமாக இருக்கிறது என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்கள் யாருடைய பேச்சையும் கேட்காதவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

எண் 4, 13, 22, 31 :
இந்த எண்களை எல்லாம் கூட்டினால் நான்கு என்ற ஒரு எண் வரும். இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக ராகுபகவான் இருக்கிறார். ஆதலால் இவர்களுக்கு இயற்கையாகவே வாழ்க்கையில் ஏற்றம் இறக்கங்கள் இருந்து கொண்டிருக்கும்.
அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு உறவு என்றும் வந்தால் அதில் நிறைய சிக்கல்களை சந்திக்க கூடியவராக இருப்பார்கள். இவர்கள் காதலிக்க கூடிய துணையானவர்கள் எப்பொழுதும் இவர்களுடனே பேசிக் கொண்டிருக்க வேண்டும் இவர்களைப் பற்றிய நினைத்துக் கொண்டிருக்கும் வேண்டுமென்று அவர்கள் அதீத அன்பால் சில நேரங்களில் ஆளுமையை வெளிப்படுத்துவதால் இது எதிர் தரப்பில் இருக்கக் கூடிய துணைக்கு பிடிக்காத ஒரு நிலையில் கொடுக்கும்.

இவர்கள் என்னதான் கடின உழைப்பாளிகளாக இருந்தாலும் சில நேரங்களில் செய்வதறியாத ஒரு சில முடிவுகளை எடுத்து விடுவார்கள். அதோடு, இவர்களுக்கு நல்லதே சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இவர்கள் நான் எடுத்த முடிவு தான் சரி என்று பயணம் செய்து நிறைய சிக்கல்களையும் சந்தித்து விடுவார்கள்.
சில நேரங்களில் இவர்களை ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்ள வைப்பது என்பது மிகக் கடினமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் எளிதாக விட்டுக் கொடுத்து வாழவும் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பக்குவமோ இவர்களிடத்தில் இருக்காது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |