கனவு என்பது சில நேரங்களில் நாம் அன்றைய தினம் வீடுகளில் முக்கியமாக பேசிய விஷயங்கள் கனவுகளில் வரலாம். சில சமயங்களில் எதிர்காலத்தை நமக்கு முன்கூட்டியே சில அறிகுறிகளோடு தெரிவிக்கும் விதமாக சில கனவுகள் வரலாம்.
அப்படியாக, இந்த கனவு சில நேரங்களில் நாம் கண்டது போல் நடைமுறை வாழ்வில் நிஜமாகுவதையும் பார்க்க முடிகிறது. அப்படியாக ஒருவருடைய கனவில் புது ஆடை அல்லது வண்ண நிறங்களில் ஆடை பார்ப்பது போல் கனவுகள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
மனிதர்கள் ஆகிய நமக்கு வண்ண வண்ண ஆடைகளை உடுத்தி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அந்த வகையில் ஒரு அழகிய ஆடையை நீங்கள் கனவில் காணும் பொழுது நீங்கள் தற்பொழுது மகிழ்ச்சியான மனநிலையில் வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருப்பதின் அர்த்தமாகும்.

அப்படி இல்லை என்றால் அவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களைத் தேடி வர போவதின்அறிகுறியாகும். கனவுகளில் அழுக்கு படிந்த ஆடையை பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒரு சில மன வருத்தம் மனதில் உள்ள அறிகுறியாகும்.
அதுவே கனவுகளில் நீங்கள் புதிய ஆடையை உடுத்திக் கொள்வது போல் கனவு வந்தால் ஒரு புதிய நட்பு உங்களுக்கு விரைவில் உருவாக போவதின் பொருளாகும். பல வண்ண நிறங்களில் நீங்கள் ஆடை அணிவது போல் கனவு கண்டால் நீங்கள் ஒரு முக்கியமான நபரை பயணத்தின் போது சந்தித்து அவர்களுடன் நெருக்கமாக இருக்க போவதின் அறிகுறியாகும்.
அந்த நபர் உங்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கக் கூடிய நபராக இருப்பார். ஒருவர் கனவில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து இருப்பது போல் வந்தால் விரைவில் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரப்போவதின் அர்த்தமாகும். கருப்பு நிற உடையை அணிவது போல் கனவு வந்தால் மட்டும் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
சிவப்பு நிற ஆடையை நீங்கள் அணிவது போல் கனவு வந்தால் நீங்கள் உணர்வுபூர்வமான ஒரு விஷயங்களுக்காக காத்திருப்பதின் அறிகுறியாகவும் அந்த விஷயம் உங்களுக்கு விரைவில் நடக்கும் என்ற ஒரு பொருளையும் குறிப்பதாகும்.

மஞ்சள் நிற ஆடையை நீங்கள் அணிவது போல் கனவு கண்டால் உங்களை சுற்றி உள்ள நபர்கள் உங்கள் மீது பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தக் கூடிய ஒரு பொருளாகும். அதேபோல் விலை உயர்ந்த ஆடை நீங்கள் கனவில் பார்க்கும் பொழுது உங்கள் வாழ்க்கை துணை உடன் நீங்கள் மகிழ்ச்சியான காலத்தை கொண்டாட போவதின் அறிகுறியாகும்.
கிழிந்த ஆடையை கனவில் பார்க்கும் பொழுது நிச்சயம் வீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் ஆடையை தைத்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் அவர்களுக்கு எடுக்கின்ற முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும்.
இதுவே துணி துவைப்பது போல் கனவு வந்தால் நீங்கள் நினைத்த விஷயங்கள் விரைவில் நிறைவாக போகிறது. துணி எரிப்பது போல் நீங்கள் கனவில் கண்டால் உங்களுடைய வறுமை விலகி இன்பம் சேரும். அதேபோல் ஆடை விற்பது போல் கனவு வந்தால் உங்களுடைய தாழ்வு மனப்பான்மையிலிருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |