தீபங்கள் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும்
இந்து மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது வழக்கம்.
வீடுகளிலும் விளக்குக்கு பூஜை செய்வதற்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட வேண்டும்.
அந்தவகையில், தீபங்கள் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்கள் குறித்தும் பார்க்கலாம்.
குத்துவிளக்கு தீபம் கிழக்கு முகமாக ஏற்றி வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும், செல்வம் உண்டாகும்.
அதேபோல், தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
தீப வழிபாட்டின் சிறப்பு
பசு நெய்- செல்வம்.
நல்லெண்ணெய்- உடல்,ஆரோக்கியம்.
விளக்கெண்ணெய்- புகழ், தாம்பத்திய சுகம்.
இலுப்பெண்ணெய்- ஜீவ சுகம், ஞானம்.
புங்க எண்ணெய்- முன்னோர்களின் ஆசி.
இந்த ஐந்து வகையான எண்ணெய்களை கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் அனைத்து நன்மைகளும், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |