வீட்டில் எந்த நாட்களில் கட்டாயம் விளக்கு ஏற்றக்கூடாது?
நம்முடைய வீடுகளில் தினமும் விளக்கு ஏற்றுவது என்பது கட்டாயம் செய்யக்கூடிய விஷயம் என்றாலும், சில முக்கியமான தினங்களில் நாம் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்கிறார்கள்.
இந்த விவரம் சிலருக்கு தெரிந்து இருந்தாலும் பலருக்கும் தெரிவதில்லை. அப்படியாக, நம்முடைய வீடுகளில் எந்த நாட்களில் கட்டாயம் விளக்கு ஏற்ற கூடாது என்று பார்ப்போம்.
1.நம்முடைய மிகவும் நெருங்கிய சொந்தமான பங்காளி(பங்காளிகள் என்றால் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள்.) வீடுகளில் இறப்பு நேர்ந்தால் கண்டிப்பாக 16 நாள் காரியம் முடியும் வரை விளக்கு ஏற்ற கூடாது. இது இறப்பு தீட்டு ஆகும்.
அவர்கள் வீட்டில் 16 நாள் காரியம் முடிந்த பிறகு, நம் வீட்டில் உள்ள பூஜை அறைகள், வீடு வாசல் எல்லாம் சுத்தம் செய்த பிறகே விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவேண்டும். சிலர் வீடுகளில் பங்காளிகள் இடையே பிரச்சனையால் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கும்.
அப்படி இருந்தாலும் அவர்கள் வீட்டில் இறப்பு நேர்ந்தால் கட்டாயம் நம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது. அதே போல் நாம் அந்த வேளையில் நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
2. அதே போல் நாம் வாசிக்கும் தெருவில் ஏதெனும் இறப்பு நடந்து, அவர்களுக்கு இறுதி சடங்கு முடியும் வரை விளக்கு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். வீதியில் இறப்பு ஏற்பட்டால் கோவில் கூட திறக்க மாட்டார்கள். அதே போல் தான் நம் வீட்டிலும் விளக்கு ஏற்றக்கூடாது.
3. நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் வீட்டில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு புண்யா தானம் செய்யும் வரை, வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது.
சில வீடுகளில் ஏழு நாட்கள் தீட்டு இருக்கும். சில வீடுகளில் பத்தாவது நாள் புணியாதனம் செய்வார்கள். இது நம் பங்காளி வீடுகளில் குழந்தை பிறந்தாலும் பொருந்தும்.
ஆக, இவ்வாறான நாட்களில் நம் வீடுகளில் விளக்கு ஏற்றுவதை தவிர்ப்பது நன்மை அளிக்கும். அதே போல் சுப தீட்டு அல்லது அசுப தீட்டு அது கழிந்து விளக்கு ஏற்றும் பொழுது வீடுகளை நன்றாக சுத்தம் செய்த பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |