வீட்டில் விளக்கேற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டியவை
விளக்கு என்பது பூஜை செய்யும் பொருட்களில் மிக முக்கியமானது.விளக்கு ஏற்றும் பொழுது வீட்டில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்து இருக்கும்.
அப்படியாக எந்த எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நம் வீட்டில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றும் பொழுது ஆரோக்கியம் கூடும்.
ஒருவர் வீட்டில் விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும்.
நம் வீடுகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் உண்டாகும்.மேலும் மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்னைகளும் தீரும்.
நமது வீட்டில் நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும்.ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும்.
இலுப்ப எண்ணெய் கோயில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.
வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும். தீபம் ஏற்றப்பட்டதில் இருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது.
அடுத்தபடியாக விளக்கு தானாக எரிந்து அடங்கினால் அது கெடுதலைக் உண்டாக்கும் என்கிறது சாஸ்திரம்.
எனவே விளக்கேற்றி அணைக்கும் போது கவனமாக செயல்படவும்.
விளக்கை அணைக்கும் பொழுது ஊதவோ இல்லை தண்ணீர் விட்டு அணைக்க கூடாது.பூக்கள் கொண்டு அணைப்பது நன்மையை உண்டாக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |