வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி.., வழிபடும் சரியான முறை
இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்.
அதேபோல், எந்த ஒரு காரியம் செய்கிற போதும் முதலில் பிள்ளையார் சுழி போடுவது உண்டு.
அந்தவகையில், இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7, 2024 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
வழிபடும் முறை
சதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு மேல் மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
வாசலில் கோலமிட்டு மாவிலை தோரணம், வாழை தோரணம் கட்ட வேண்டும்.
வாழையிலையில் பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.
நெய்வேத்தியமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று விநாயகருக்கு படையல் செய்தல் வேண்டும்.
விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.
மேலும் சாம்பிராணி, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை வீட்டில் உள்ள அனைத்து நாட்களும் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |