ஒரு துளி நீருக்குள் விநாயகர்: மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்
முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்காமல் எந்த ஒரு காரியமும் செய்வதில்லை. மேலும் எந்த ஒரு புது விஷயம் எழுதத்தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவோம்.
பொதுவாக விநாயகரை வழிபட்டு ஒரு காரியம் செய்ய அந்த காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நல்ல விதமாக முடியும்.
அப்படியாக முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளை சனிக்கிழமை ஆவணி 22ஆம் தேதி (07.09.2024) கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நம்முடைய ஜாதகத்தில் உள்ள தடைகள் யாவும் விலகி வாழ்க்கை மேம்பபடும். அப்படியாக நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட உகந்த நேரம் எது என்பதை பற்றி பார்ப்போம்.
நாளை விநாயகருக்கு காலை 07.45 - 08.45, காலை 10.40 - 01.10,மாலை 05.10 - 07.40 பூஜைகள் செய்து நம்முடைய வழிபாட்டை செய்யலாம்.
மேலும் விநாயகர் சதுர்த்தி நாளில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றது
வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜையறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இந்த விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
புகைப்படங்கள்- பாலச்சந்தர் ச
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |