விநாயகரை வணங்கும் போது ஏன் குட்டு வைக்கிறோம்?
விநாயகர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். மேலும் எந்த விஷேசம் என்றாலும் இல்லை மங்கள நிகழ்வுகள் அல்லது வீட்டில் சின்ன பூஜை என்றால் கூட சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்துவைத்து பிறகு தான் அந்த காரியத்தை தொடங்குவார்கள்.
விநாயகரை நாம் ஏன் முதலில் வழிபட வேண்டும் அவரின் சிறப்புகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்
"வி" என்றால் "மேலானவர்" , "நாயகன்" என்றால் "தலைவன்" தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாத தெய்வம் விநாயகர்.
மேலும் "கண' என்பது உயிர்க்கூட்டங்களை குறிக்கும்," பதி" என்பது தலைவனை குறிக்கும் உயிர்க்கூட்டங்களின் தலைவன் கணபதி ஆவார் என்பதை உணர்த்துகிறது.
எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் விநாயகரை வணங்கினால் தான் நாம் செய்யும் காரியம் தடை இல்லாமல் நடக்கும்.
செய்யும் தொழிலில் தடங்கல் ஏற்பட்டால் வீட்டில் ஹோமம் செய்வதுண்டு, அப்படியாக தொழிலில் வளர்ச்சி அடைய லட்சுமி ஹோமம் நடத்துவோம்.
உடல் நலம் பெற சூரிய நாராயண பூஜை செய்வோம், அம்பிகை அருள் பெற சண்டி ஹோமம் நடத்துவோம்.
இப்படி எத்தனை பெரிய ஹோமங்கள் பூஜைகள் செய்தாலும் விநாயகரை முதலில் நாம் வணங்கிய பின்னே தொடங்கவேண்டும்.
ஏனெனில் நாம் செய்யும் தொழில் விக்னம் அதாவது தடை ஏற்படாமல் இருக்க நாம் விநாயகரை வணங்குவது அவசியமாகிறது.
ஆனால், விநாயகரை வணங்க வேறொரு காரணமும் உண்டு. அதாவது நம் வாழ்க்கையில் மனிதர்களால் மட்டுமே தடங்கல் ஏற்பட கூடும் என்பதில்லை, நாம் வழிபடும் தெய்வங்கள் அருள்புரிவதில் கூட தடைகள் ஏற்படலாம், அதற்காகவும் நாம் விநாயகருக்கு முதலில் பூஜை செய்வது அவசியம்.
நம் இஷ்ட தெய்வங்கள் வழிபடும் முன் விநாயகர் ஸ்லோகம் சொல்லி நெற்றியில் குட்டு வைத்த பின்னரே பிற வழிபாட்டை தொடங்கவேண்டும், அப்படி செய்வதனால் எந்த தடைகள் இருந்தாலும் விலகி இறைவனின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்.