திருப்பதி ஏழுமலையான் கோயிலில் VIP தரிசனம் ரத்து - முழு விபரம் இதோ
ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30 ஆம் திகதி வரை VIP தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
VIP தரிசனம் ரத்து
ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து தரிசித்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் விஷேட நாட்களில் பக்தர்களின் அதிகமாகவே இருக்கும். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.
திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கியது. ஆனாலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே நாளை காலை வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜூன் 30 ஆம் திகதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |