பவுர்ணமியன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இறைவன், அவன் தான் எல்லாமும். அவனின்றி எதுவும் இல்லை. கால ஓட்டத்தில் பல துன்பங்கள் மத்தியில் நமக்கு ஆறுதல்களாக இருப்பது இறைவழிபாடு மட்டுமே ஆகும். இங்கு பலரும் பல இன்னல்கள் சந்தித்து வருகின்றனர். அந்த இன்னல்களில் இருந்து விடு பட பலரும் தெய்வ வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கின்றனர்.
அந்த வகையில், இறைவழிபாடுகளில் பலரால் கடைபிடிக்க கூடியதில் ஒன்று விரதம். பலரும் பல வேண்டுதலை இறைவனிடம் வைத்து விரதம் இருந்து மனம் உருகி வழிபாடு செய்வர்.
அப்படியாக நாம் பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால் நம் வாழ்க்கை பிரகாசமாகும் வளமும் உண்டாகும்.
அந்த வரிசையில் விரதம் இருக்கும் பொழுது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பலன்களை தருகின்றது. அதை பற்றி பார்ப்போம்
சித்திரையில் விரதம் இருந்து வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்
வைகாசியில் விரதம் இருந்தால் பிறவா நிலை அடையலாம்
ஆனி மாதம் விரதம் இருக்கையில் நாம் செய்யும் செயல் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கின்றது
ஆடி மாதம் விரதம் இருந்தால் சகல யோகங்கள் நம்மை வந்து சேரும்
ஆவணியில் விரதம் இருந்து வழிபட வீட்டில் செல்வ வளம் பெருகும்
புரட்டாசி மாதம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்
ஐப்பசியில் விரதம் இருக்க பசிப்பிணி அகலும்
கார்த்திகையில் விரதம் இருக்க நிலைத்த புகழ் கிட்டும்
மார்கழியில் விரதம் இருக்க உடல் ஆரோக்கியம் மேம்படும்
தை மாத விரதம் இருந்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்
மாசியில் பவுர்ணமி அன்று விரதம் இருக்க மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்
பங்குனி மாதம் விரதம் இருக்க மனதில் தர்ம சிந்தனை உண்டாகும்
இப்படி பன்னிரெண்டு மாதமும் பல பலன்களை தரும் விரதத்தை கடைபிடித்து சிவனின் அருள் பெற்று வாழ்க்கையில் எல்லா வளமும் பெறுவோமாக...