கன்னி ராசிக்காரர்களின் வாழ்நாள் கர்ம பலன் என்ன தெரியுமா ?

By Sakthi Raj Jun 09, 2026 07:23 AM GMT
Report

 ஜோடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கர்ம பலன் இருக்கிறது. அது அவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதை நாம் பார்க்கலாம். அப்படியாக புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற கன்னி ராசியினரின் வாழ்நாள் கர்ம பலன் என்னவென்று பார்ப்போம்.

கன்னி ராசியினர் பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளிடம் கடமை தவறாமல் இருப்பது அவசியமாகும். சில நேரங்களில் இவர்கள் கடமை தவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அவ்வாறு செய்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளையும் கர்ம வினையையும் அவர்கள் சம்பாதித்து விடுவார்கள்.

மேலும், ஏழாம் இடத்து அதிபதியான குரு பாதகாதிபதியாக இருப்பதால் முதல் திருமணத்தில் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வாழ்க்கை துணையை நன்றாக புரிந்து கொண்டு அனுசரித்து செல்வதால் மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் அலட்சியம் செய்தால் விவாகரத்து போன்ற விபரீத நிகழ்வுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும்.

2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

பிள்ளைகளுடைய கல்விக்காக தேவையற்ற மன அழுத்தங்களை விடுவது அவசியமாகும். சனி பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் சூதாட்டம் அல்லது பந்தயம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் ஒரு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.

கன்னி ராசியினர் அழகு சாதன பொருட்கள் மற்றும் உணவு தொழில் போன்றவற்றை சிறப்பாக செயல்பட கூடியவர்கள் நண்பர்கள் மற்றும் மாமனார் இவர்களுக்கு எப்பொழுதும் நல்ல ஆதரவை கொடுப்பார்கள்.

இருப்பினும் தொழில் செய்யும் பொழுது பார்ட்னர்ஷிப் தொழில் செய்வதை இவர்கள் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். இவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் விலக ஐயப்பன் அல்லது ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும். மேலும், உக்ர தெய்வ வழிபாடுகள் இவர்களுக்கு நல்ல பலன்கள் கொடுக்கும்.

இவர்கள் ஒரு இடத்தில் தர்ம காரியத்திற்காக செல்கிறார்கள் என்றால் முடிந்தவரை அதை கட்டாயமாக செய்து முடித்து விட வேண்டும். பின் வாங்குவது போன்ற செயல்கள் இவர்களுக்கு கட்டாயம் பலன் அளிக்காது.

அதேபோல், இவர்கள் ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்தால் அதையும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். மேலும், கன்னி ராசியினருக்கு வாழ்க்கை முழுவதும் அவர்களுடைய கர்ம பலன்கள் எவ்வாறு செயல்படும் என்பதை இந்த காணொளிகள் பார்த்து தெரிந்து கொள்வோம். 



 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US