தீய சக்திகளை விரட்ட நீரை பயன்படுத்துவது எப்படி தெரியுமா?
இந்த உலகத்தில் நன்மை என்றால் நிச்சயம் தீமை என்ற ஒன்று இருக்கும். அந்த வகையில், தீய அதிர்வலைகள் நம்முடைய வீடுகளை சூழும் பொழுது நிச்சயம் வீடுகளில் ஒரு சில கசப்பான நிகழ்வுகள் நடக்க தொடங்கும்.
அப்படியாக, ஜோதிட ஆன்மீக ஆன்மீக சாஸ்திர ரீதியாக நாம் நம்முடைய நீர் கொண்டு இந்த தீய சக்திகளை விரட்டலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

நம்முடைய இந்திய மரபில் நீரை தெய்வமாக போற்றி வழிபடுகின்றோம். அந்த அடிப்படையில், ஏழு புனித நதிகள் வழங்கப்படுகிறது. அவை தான் கங்கா, யமுனா கோதாவரி, காவேரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து ஆகியவை ஆகும்.
1. வீடுகளில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலக ஒரு பானை அல்லது ஒரு குவளை நிறைய நீரை சூரிய பகவானுக்கு கீழ் வைத்து வணங்கி பிறகு அந்த நீரை மாவிலை கொண்டு வீடு முழுவதும் தெளித்து பின்பு விஷ்ணு பகவானுடைய ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர நொடிப்பொழுதல் வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறையாற்றல் விலகிவிடும்.

2. அதேபோல் ஒரு கிண்ணம் நீரில் கல் உப்பு கலந்து வீட்டு வாயிலில் வைத்து விட வேண்டும். அந்த நீரினுடைய நிறம் மாறும்பொழுது அதனை அகற்றிவிட்டு வேறு நீரை மாற்றி வைக்க வேண்டும். அந்த நிறமாற்றம் அந்த வீட்டில் இருந்த தீய சக்திகளை அந்த நீர் உப்பு உறிஞ்சுகிறது என்று அர்த்தம்.
3. மேலும், வீடுகளில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதக்கூடிய சங்கில் நீரினை ஊற்றி வீடு முழுவதும் தெளித்து பின்பு தினசரி மாலை நேரத்தில் சங்கினை ஒலிக்க செய்து அதனை தினமும் பராமரித்து வந்தாலும் வீட்டில் உள்ள தீமை யாவும் விலகிவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |