2026: சனி பகவானால் உருவாகும் சச ராஜயோகம்.. உச்சத்திற்கு செல்ல போகும் 3 ராசிகள்

By Sakthi Raj Sep 01, 2026 09:03 AM GMT
Report

 ஜோதிடத்தில் நீதிமானாக விளங்க கூடிய சனி பகவான் ஒவ்வொரு மனிதன் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு நன்மை தீமையை வழங்கக்கூடியவர். அந்த வகையில் சச ராஜ யோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடியது.

ராஜ யோகத்திலே சச ராஜ யோகத்தில் சனிபகவான் அதிக வலிமை பெறுவதால் நீண்ட நாட்களாக கஷ்டம், தடை, தாமதங்கள் இருக்கும் ராசிகளுக்கு ஒரு நல்ல முன்னேற்றக் கிடைக்கும். அந்த வகையில், உருவாகும் இந்த சச ராஜயோகத்தால் யாருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

2026: சனி பகவானால் உருவாகும் சச ராஜயோகம்.. உச்சத்திற்கு செல்ல போகும் 3 ராசிகள் | 2026 Sept Sasha Rajayoga Bring Luck To 3 Zodiac

விருச்சிக ராசியினர் கவனத்திற்கு...இவர்களுக்கு யாரால் அதிக தொந்தரவு வரும்

விருச்சிக ராசியினர் கவனத்திற்கு...இவர்களுக்கு யாரால் அதிக தொந்தரவு வரும்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் எதிர்பார்த்த வருமானமும் முன்னேற்றமும் கிடைக்கும். கடன் சுமை குறையும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு ச ச ராஜயோகம் இவர்களுக்கு தொடர்ந்து சந்தித்து வந்த தாமதங்கள் தடைகளில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. திடீர் வேலை மாற்றம் வருமானத்தில் உயர்வு ஆகியவை பெறுவீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்வதால் நீங்கள் அதற்குரிய பலன்களை பெறுவீர்கள்.

விதியை வெல்ல தினமும் காலையில் இந்த பாடலை பாடினால் விரைவில் பலன் கிடைக்குமாம்

விதியை வெல்ல தினமும் காலையில் இந்த பாடலை பாடினால் விரைவில் பலன் கிடைக்குமாம்

மகரம்:

சனிபகவானுடைய சொந்த ராசியான மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உடைய வலிமையால் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் கிடைக்கும். கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் இவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செய்வதால் நல்ல பலன் உண்டு. பெயர் புகழ் உயரப் போகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US