ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் இந்த கிரகம் மட்டும் இருக்கவே கூடாதாம்.. என்ன தெரியுமா
ஜோதிடத்தில் இரண்டாம் வீடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இரண்டாம் வீடு தான் ஒருடைய செல்வம், குடும்பம், பேச்சு, உணவு, கண்கள் முகம் ஆகிவற்றை குறிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
அந்த வகையில், ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இந்த கிரகம் மட்டும் இருந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு உண்டாகுமாம். அதை பற்றி பார்ப்போம். இரண்டாம் வீட்டில் ராகு பகவான் இருந்தால் அவர்களுக்கு பணபிரச்னை, குடும்பத்தில் குழப்பம் தவறான பழக்கவழக்கங்கள் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகள் வரக்கூடும்.
அதேபோல் கேது பகவான் இருந்தால் குடும்பத்தை விட்டு விலகி இருப்பது பணத்தில் நிலையற்ற தன்மை.

மேலும், இவர்கள் குறைவாக பேசி அதை தவறாக பிறர் புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரலாம். சனி இரண்டாம் வீட்டில் இருக்க இவர்களுக்கு பணம் சேர்வதில் சில தாமதம் வரலாம். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும்.
பேச்சில் கடினத்தன்மை இருக்கும். அதுவே, சனி பலமாக இருந்தால் மெதுவாக நல்ல செல்வத்தையும் கொடுக்கலாம்.
செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற பொழுது கோபமான பேச்சு குடும்பத்தில் அடிக்கடி தகராறு செலவுகள் அவசர முடிவுகள் எடுக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், இரண்டாம் இடத்தில் சூரியன் இருந்தால் அகங்காரம் கலந்த பேச்சு தந்தை அல்லது குடும்பத்துடன் கருத்து வேறுபாடு கண், முகம் தொடர்பான சிறிய பிரச்சனைகள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |