உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் கெட்ட குணம் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த குணாதிசயங்கள் அடிப்படையில் அவர்களுடைய குணநலன்கள் மாறுபடுகிறது. அப்படியாக எல்லார் ராசிக்கும் நன்மை என்று ஒன்று இருந்தால் கட்டாயம் தீமை என்று ஒன்று இருக்கிறது. அதன் அடிப்படையில் 12 ராசிகளின் நல்ல மற்றும் கெட்ட குணம் என்னவென்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினரின் நல்ல குணம் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுடைய பேச்சில் ஒரு தைரியம் இருக்கும். ஆனால் கெட்ட குணம் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு அதிக அளவில் கோபம் வரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒருவருக்கு முன் வந்து உதவுவார்கள். ஆனால் அவர்களின் கெட்ட குணம் இவர்களுடைய பிடிவாதம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் அன்பான பேச்சு கொண்டிருப்பவர்கள். ஆனால் இவர்களுடைய கெட்ட குணம் இவர்களுடைய மனமானது ஒரு நிலை தன்மையில் இருக்காது.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் கனிவாக பேசக் கூடியவர்கள். ஆனால் இவர்களுடைய கெட்ட குணம் முன்கோபம் அதிகம் வரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருந்தாலும் பல நேரங்களில் இவர்களுடைய தலைக்கணம் இவர்களுடைய கெட்ட குணமாக அமைந்துவிடுகிறது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் கெட்ட குணம் அதிக அளவில் சந்தேகம் கொள்வார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் பண்பானவர்கள். ஆனால் இவர்கள் கெட்ட குணம் அவசரமாக நிறைய முடிவுகளை எடுத்து விடுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மையான குணம் கொண்டவர்கள். ஆனால் எதையும் சற்று அதிக அளவில் வெறுத்துவிடுவார்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் உண்மையான அன்புடன் ஒருவரிடம் பழகுவார்கள். ஆனால் இவர்களுடைய கெட்ட குணம் என்றால் இவர்களுடைய சோம்பல் ஆகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் நல்ல உழைப்பாளிகள். இருப்பினும் எல்லா விஷயங்களுக்கும் அதிக அளவில் சந்தேகம் கொள்வார்கள்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பார்கள். ஆனால் கெட்ட குணம் என்னவென்றால் நிறைய தனிமையை விரும்பக் கூடியவர்கள்.
மீனம் :
மீன ராசிக்காரர்கள் அன்பு, இரக்க ,குணம் கொண்டவர்கள். இவர்களுடைய கெட்ட குணம் இருப்பதை தவிர்த்து கற்பனைகளில் நிறைய நேரத்தை செலவிடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |