புராணங்களில் மஹாசிவராத்திரியில் நடந்த அதிசயங்கள்
சிவபெருமானின் மிக முக்கியமான விசேஷங்களில் மாசி மஹாசிவராத்திரியும் ஒன்று.இந்த மஹாசிவராத்திரி அன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.அப்படியாக இந்த மஹாசிவராத்திரியில் பல முக்கியமான அதிசயங்கள் நடந்திருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
1.பிரம்மா அவருடைய படைப்பு தொழிலை தொடங்கினர்.
2.மஹாவிஷ்னு,முருகப்பெருமான்,மஹாலட்சுமி ஆகியவர்கள் சிவபெருமானின் அருளை பெற்றனர்.
3.குபேரன் செல்வத்திற்கு அதிபதி ஆனார்.
4.பார்வதி தேவி சிவபெருமானுடைய இடப்பாகத்தை பெற்றாள்.
5.மஹாபாரதத்தில் அர்ஜுனன் கடும் தவம் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெற்றார்.
6.சிவன் கண்களில் ரத்தம் வழிய தன் கண்களையே படைத்தார் கண்ணப்பர்.
7.பகீரதன் அவருடைய தவ சக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார்.
8.மார்க்கண்டையனுக்காக சிவபெருமான் எமனை காலால் எட்டி உதைத்தார். .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |