நெற்றியில் திருநீறு வைப்பதால் இத்தனை நன்மைகளா?
பொதுவாக,அனைவராலும் அவ்வளவு எளிதாக திருநீறு எடுத்து நெற்றியில் வைக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை.காரணம் அது சிவபெருமானுக்கு உரிய பொருள்.அவர் அருள் இருந்தாலே அதை பூசிக்கொள்ளும் பாக்கியம் கிட்டும்.அப்படியாக,பலருக்கும் திருநீறு வைப்பதின் மகத்துவம் தெரிவதில்லை அதை பற்றி பார்ப்போம்.
விதி வந்தால் அது தடுக்க எவர் வருவார் என்பது தான் நம் அனைவருடைய நம்பிக்கையும்.ஆனால் மனதில் சிவனும் நெற்றியில் திருநீறும் இருக்க எவர் அருகில் வருவார் என்பது தான் உண்மையான தத்துவம் ஆகும். அப்படியாக,விதிப்படி மார்க்கண்டேயனுக்கு ஆயுள் 16 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அவரின் அந்த நாள் நெருங்க எமன் அவன் உயிரை பறிக்க வந்தான்.ஆனால் மார்க்கண்டேயன் எமனிடம் இருந்து தப்பிக்க நெற்றியில் திருநீறு பூசி சிவலிங்கத்தை இறுக பற்றிக்கொண்டான்.இருந்தும்,எமன் அவன் கடமையை செய்யவேண்டும் என்று மார்க்கண்டேயன் அருகில் செல்ல சிவபெருமான் எமனை காலால் மிதித்து தள்ளினார்.
அதில் இருந்து எமன் அவருடிய தூதர்களிடம் எவர் ஒருவர் நெற்றியில் திருநீறு அணிந்து சிவநாமம் சொல்லியபடி இருக்கிறார்களோ அவர்களை விலகி செல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.மேலும்,திருநீறுக்கு காப்பு,ரட்சை என்றும் பெயருண்டு.
நாம் எப்பொழுதும் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளும் பொழுது சிவாயநம என்று நாமம் சொல்லியபடி பூசிக்கொள்ள வேண்டும்.இதனால் நம்முடைய மனம் தூய்மை அடைவதோடு,தீய சக்திகள் நம்மை அண்டாமல் சிவபெருமான் காத்தருளுவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |