சிவபெருமானின் அருளை பெற சிவராத்திரி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி என்பது மிகவும் விஷேசமானது.பலரும் அன்றைய நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள்.இன்னும் சிலர் அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்று குலதெய்வம் கோயிலில் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு செய்வார்கள்.
மேலும்,நாம் சிவராத்திரி அன்று வீட்டில் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலகி மன அமைதி கிடைக்கும்.அப்படியாக சிவராத்திரி அன்று நாம் வீட்டில் எவ்வாறு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
இந்த தீபத்தை பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மகா சிவராத்திரிக்கு மறுநாள் வரை எறிய விட வேண்டும்.அதாவது பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு ஒரு அகல்விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் எரிய விட வேண்டும்.
அதாவது இரவு 9 மணி வரை இந்த தீபம் எரிய வேண்டும். பிறகு இதைக் குளிர வைத்துவிடலாம்.ஆனால் சிவராத்திரி அன்று அன்று மாலை 6 மணிக்கு ஏற்றக்கூடிய இந்த தீபமானது மறுநாள் அதாவது பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி வரை எரிய வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு தாம்பாள தட்டில் சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடிய விபூதியை பரப்பிக் கொள்ளவேண்டும்.அதற்கு மேல் சந்தன தூளை பரப்பி அந்த சந்தனத் தூளின் மேல் இந்த அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு தீபம் ஏற்றி அணைத்த பிறகு அதை நாம் நெற்றியில் வைத்து கொள்ளலாம்.இவ்வாறு செய்வது நம்முடைய மனமும் அமைதி பெறுவதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.பொதுவாகவே தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது நம் மனதிற்கு மகிழ்ச்சி சந்தோஷமும் அளிக்கும்.ஆக சக்தி வாய்ந்த சிவராத்திரி அன்று செய்ய நமக்கு சிவனின் அருளால் நினைத்ததை சாதிக்க தைரியமும் நம்பிக்கையும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |