நீங்கள் பிறந்த தேதி இதுவா? பகவத் கீதை உங்களுக்காக சொல்லும் செய்தி இதுதான்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த எண் கணிதம் கொண்டும் நாம் ஒருவருடைய வாழ்க்கை மற்றும் குண நலன்களை தெரிந்து கொள்ளலாம். அப்படியாக, ஒருவர் வாழ்க்கையை வழிநடத்தக்கூடிய நண்பனாகவும் ஆசானாகவும் திகழக்கூடிய பகவத் கீதை உலகம் அழியும்வரை கைபிடித்து கூட்டிச் செல்லக்கூடிய அற்புத படைப்பாகவே இருக்கிறது.
பகவான் கிருஷ்ணர் மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த இந்த பகவத்கீதை மனிதர்கள் படித்து தெரிந்து கொள்ளும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.
அப்படியாக, ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கிரகம் ஆளக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பகவத் கீதை என்ன செய்தி சொல்கிறது என்று பார்ப்போம்.

எண்: 1, 10, 19, 28:
ஒருவரை உயர்த்தி விடவும் தாழ்த்தவும் அந்த ஒரு நபரால் மட்டுமே முடியும். அதுதான் "நாம்". ஆக, நாம் தான் நம்முடைய எதிரி, நாம்தான் நம்முடைய நண்பன் என்பதை உணர்ந்து எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்று மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எண் 2,11, 20, 29:
இந்த தேதியில் பிறந்தவர்கள் மனச்சோர்வுகளில் இருந்து விடுபடவும் மனதை வலிமையோடும் நிலை தடுமாறாமல் வைத்துக் கொள்வதற்கும் நாம் தியானம் செய்து பழக வேண்டுமே தவிர அன்றைய நொடியில் அந்த நேரத்தில் இருந்து தப்பிப்பதற்காக மட்டும் நாம் தியானம் செய்யதல் கூடாது.
எண்: 3,12, 21, 30:
இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் இந்த பிரபஞ்சம் இறைவன் செயலுக்குள் அடங்கியது என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நடப்பது, நடக்கப் போவது, நடந்தவை எல்லாம் இறைவனுடைய செயல் என்று புரிந்தவர்கள் அறிவிற்கும் ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர்களாகும் ஆகிறார்கள். அவர்களுக்கு மனச்சோர்வு குழப்பங்கள் வருவதில்லை. அவ்வாறு வாழப் பழக வேண்டும்.
எண் 9, 18, 27:
இந்த தேதியில் பிறந்தவர்கள் பற்றற்ற வாழ்தலை கற்றுக்கொள்ள வேண்டும். பற்றின்மையோடு செயல்படுவதால் நம்மை குழப்பத்திலும் தோல்வியிலும் பல நேரங்களில் நமக்கு அழிவை கொடுக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |