எந்தெந்த உயிரினங்களுக்கு உணவளித்தால் என்னென்ன தோஷங்கள் நீங்கும்?
தர்மம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்.
அதிலும் வாயில்லாத ஜீவன்களான பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
முக்கியமாக, நம் கர்ம வினைகள் நீங்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், எந்தெந்த விலங்குகளுக்கு, பறவைகளுக்கு உணவளித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1. சூரியன்- குதிரைக்கு உணவு அளிப்பதன் மூலம் சூரிய பகவானால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
2. வியாழன்- மாடுகளுக்கு தீவனமும் யானைகளுக்கு உணவும் அளிக்க கல்விக்கு அதிபதியான வியாழனின் தோஷங்கள் நீங்கும்.
3. சந்திரன்- சந்திரன் பார்வை உக்ரமாக இருந்தால் மீன், ஆமை போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிக்கலாம்.
4. செவ்வாய்- ஆடு, செம்மறியாடு மற்றும் குரங்குகளுக்கு உணவு கொடுத்தால், வாழ்வின் தடைகள் நீங்கும்.
5. புதன்- கிளிகளுக்கு உணவு தர வேண்டும்.
6. சுக்கிரன்- செல்வத்தை அள்ளித்தரும் கிரகம் சுக்கிரன் என்பதால், புறாக்களுக்கு தானியம் கொடுக்க செல்வம் அதிகரிக்கும்.
7. சனி- சனி பகவானின் அருள் பெற எருமை, கருப்பு நாய், காகம் ஆகியவற்றுக்கு உணவு அளிக்கலாம்.
8. ராகு கேது- ஜாதகத்தில் ராகு, கேது வலுபெற நாய்களுக்கு ரொட்டி, எறும்புகளுக்கு சீனி கொடுத்தால் நல்ல பலன் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |