கர்மா என்பது ஒரு சங்கிலி தொடர் போல்.. நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்
உலக வாழ்க்கையை எவர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு கட்டாயம் இந்த கர்மாவை பற்றிய ஆய்வு சிந்தனை அதிகம் தோன்றும். மேலும், நவகிரகங்களில் கர்ம காரகனாக விளங்கக் கூடியவர் சனி பகவான்.
அதனால் தான் சனி பகவான் நவகிரகங்களில் தராசு சின்னத்தை கொண்டிருக்கக் கூடிய துலாம் ராசியில் உச்சம் பெறுகிறார். தராசு எவ்வாறு சமநிலையில் நமக்கு எடை போட்டு கொடுக்கிறதோ அதைப்போல் சனி பகவானும் ஒருவர் செய்கின்ற நன்மை தீமையை சரியாக கணக்கு பார்த்து அவர்களுக்கு அதற்குரிய நன்மை தீமை கொடுக்கிறார்.
இந்த கர்மா என்பது உண்மையில் ஒரு அற்புதமான தேடுதலாகும். அப்படியாக, கர்ம வினை என்றால் என்ன" இந்த கர்ம வினை எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம்.
இந்த உலகத்தில் ஒரு உயிர் பிறந்து அதனுடைய கர்ம பலனை அனுபவிக்கும் நொடி வரை அவனுடைய உயிர் இந்த உலகிலே இருக்கும்.

அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவனுடைய கர்ம வினைகளை கழிக்காமல் இந்த பூமியிலிருந்து அவன் உயிர் பிரிந்து செல்ல முடியாது. இதைத்தான் பெரியவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவன் விதி வந்து இறந்து விடுவதும் உண்டு.கடலுக்குள் சாகவேண்டும் என்று சென்றவன் பல முத்துக்களை அள்ளிக் கொண்டு வந்து விடுவதும் என்று.
ஆக, சிந்தனை நம்முடையதாக இருந்தாலும், செயல் இந்த பிரபஞ்சத்தின் உடையதாக இருக்கிறது. அதை போல், மக்கள் கூடிய இடத்தில் எல்லாரும் அமர்ந்திருக்க ஒரு நாயானது ஒரு குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் நோக்கி வாலாட்டிக் கொண்டு செல்லும்.
இன்னும் சொல்லப்போனால் அவர்களை பின் தொடர்ந்து அந்த நாய் வெகு தூரம் செல்வதை நாம் பார்க்க முடியும். இதுவும் அந்த மனிதருடைய கர்ம சங்கிலியின் ஒரு பகுதியே ஆகும். நம்மை கடிக்கின்ற எறும்பாக இருக்கட்டும் நமக்கு விதிக்கப்பட்ட கர்ம வினைப்படி அது நடக்கும்.
இந்த நேரத்தில் இந்த மனிதர் இந்த ஒரு சிறிய உயிரினால் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருந்தால் கட்டாயம் அது நடக்கும். இதே போல் தான் நாம் சந்திக்கக்கூடிய மனிதர்களும் எந்த ஒரு கர்ம வினையின் தொடர்பும் இல்லாமல் நாம் யாரையும் சந்தித்து பேசக்கூடிய நிலை வராது.

இதில் ஒருவருடைய கர்ம வினையானது நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு மகான்கள், சித்தர்களுடைய அருளால் அவர்களுடைய சந்திப்புகளால் அவர்கள் இன்னும் நல்ல ஆன்மாவாக உயர்வடைய கூடிய வாய்ப்புகளை பெறுகிறார்கள்.
அதனால், நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு மனிதருக்கும் நமக்கும் தொடர்புகள் இருக்கிறது. இங்கு நமக்கு தொடர்புகள் இல்லாத விஷயங்கள் நமக்கு கிடைக்கப் போவது இல்லை. இதைவிட முக்கியமாக நாம் இந்த உலகத்தில் சிந்தித்து செயல்பட முடியுமே தவிர்த்து விடையை பகவானால் மட்டுமே கொடுக்க முடியும்.
நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களுடைய கர்ம வினைக்கும் ஏற்ப நீங்கள் ஒரு சில காரியங்களை செய்தாக வேண்டிய நிலை இருந்தால் கட்டாயம் காலம் உங்களை வைத்து அந்த வேலையை செய்து முடித்து விடும்.
நீங்கள் வேண்டும் என்று துடித்தாலும் உங்களுடைய கர்ம வினையானது அதற்கு சரிவர இல்லை என்றால் எவ்வளவு கடினமாக நீங்கள் தவம் செய்தாலும் அதை முழுமையாக நீங்கள் அடைய முடியாது. அதனால்தான் கர்ம வினை ஒரு சங்கிலி போன்றது என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |