தவறியும் வீடுகளில் இந்த பொருட்களை வைத்து விடாதீர்கள்.. பண கஷ்டம் வருமாம்
இந்து மதத்தில் ஆன்மீக ரீதியாக நிறைய விஷயங்களை நாம் பின்பற்றி வருகின்றோம். அந்த வகையில் காலம் காலமாக நம்முடைய முன்னோர்களில் துவங்கி இன்றைய சூழ்நிலை வரையிலும் வீடுகளில் உடைந்த பொருட்களை வைப்பதற்கு அனுமதி இல்லை.
உடைந்த பொருட்கள் எவ்வளவு உயர்ந்த மற்றும் அழகான பொருட்களாக இருந்தாலும், ஒரு பொருள் உடைந்து விட்டது என்றால் அதை நிச்சயம் அகற்றி விட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இதற்கு பின்னால் வாஸ்துரீதியாக மிகப்பெரிய காரணம் இருக்கிறது. ஆக எதனால் நாம் உடைந்த பொருட்களை வீடுகளில் வைக்க கூடாது என்று பார்ப்போம்.

நம்முடைய வீடுகளில் வைக்கக்கூடிய எல்லா பொருட்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கண்ணாடி எடுத்துக் கொண்டால் அவை நம்மை பிரதிபலிக்கிறது. கடிகாரம் நமக்கு நேரத்தை காட்டுகிறது. மின் விளக்கு நமக்கு வெளிச்சத்தை கொடுக்கிறது என்று ஒவ்வொரு பொருட்களும் நமக்கு ஒவ்வொரு வகையில் உதவியாக இருக்கிறது.
அப்படியாக அந்த பொருட்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பொருள் தவறுதலாக உடைந்து விடுகிறது என்றால் அதை அகற்றி விட வேண்டும். காரணம் உடைந்த பொருட்கள் நமக்கு நிறைய பழைய நினைவுகளை நினைவூட்டுவதற்கான வாய்ப்புகள் மனரீதியாக அதிகம்.
ஒரு பொருள் உடைந்து இருக்கும் பொழுது நம்மை அறியாமல் கடந்த கால நினைவு வந்து போகும். நாம் ஏதேனும் செய்ய தவறிய விஷயங்கள் கண் முன் வரும். நம்மை ஒரு இடத்தில் திருத்திக்கொள்ள வேண்டும் என்று அதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாலும் ஒரு வகையான ஒரு தாழ்வு மனப்பான்மையை நமக்கு மனரீதியாக இந்த உடைந்த பொருட்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
ஆக, வாஸ்து ரீதியாகவும் உடைந்து பொருட்கள் வீடுகளில் இருக்கும் பொழுது ஒரு முடிவற்ற நிலை அவை தருகிறது. இவை நம்முடைய நேர்மறை ஆற்றலை தொந்தரவு செய்யக்கூடும். உதாரணமாக உடைந்த கண்ணாடி நாம் உடைந்தது போல் பிரதிபலிக்கும்.

உடைந்த கடிகாரம் எந்த இடத்தில் நின்றதோ அதே மணித்துளியில் நின்று கொண்டிருக்கும். உடைந்த பூட்டு நமக்கு ஒரு வகையான பதட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கும். இவ்வாறு உடைந்த பொருட்கள் நம்மை சுற்றி இருக்கும் பொழுது நம் மனமானது சற்று பாரமாக உணரும்.
ஏதோ ஒரு உடைந்த நிலையில் நாம் காணப்படுவோம். அதனால் முடிந்த அளவிற்கு நம்மை சுற்றி நல்ல அதிர்வதை கொடுக்கக்கூடிய பொருட்களை வைத்திருப்பதால் மட்டுமே வாஸ்து ரீதியாகவும் மனரீதியாகவும் மனம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
என்னதான் உடைந்த பொருட்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே ஏற்றுவதற்கு மனம் வரவில்லை என்றாலும் மெதுவாக அதை நாம் அப்புறப் படுத்துவதற்கு நம்மை பழகிக் கொள்ள வேண்டும் அல்லது அதை புதுப்பித்து ஒரு அழகான பொருளாக மீண்டும் உருவாக்க முடியும் என்றால் அதையும் நாம் கையாளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |