உலகப்புகழ் பெற்றுக்கொடுக்கும் சரஸ்வதி யோகம்.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?
ஜோதிட சாஸ்திரத்தில் பல முக்கியமான அமைப்பு உள்ளது. அப்படியாக, ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம் என்ற ஒரு அற்புத அமைப்பு உள்ளது. இந்த யோகம் இருக்கும் குழந்தைகள் மிகப் பெரிய புத்திசாலியாகவும் பெரிய மேதையாகவும் விளங்குவார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களில் ராஜா என்று அழைக்கப்படும் குரு பகவானும், மந்திரி என்று அழைக்கக்கூடிய புதன் பகவானும், அசுர குரு என்று அழைக்கக்கூடிய சுக்கிர பகவானும், ஒரே வீட்டில் இணைந்து எந்த பாவ கிரகத்தின் உடைய தொடர்பும் கொள்ளாமல் இருந்து இதில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமர்வது சரஸ்வதி யோகம் என்று சொல்லப்படுகிறது.

அதிலும், இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு ஒருவர் இருக்க பெற்றால் அவர்கள் மிகச் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இந்த சரஸ்வதி யோகத்தால் அந்த ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்களுடைய மிகச்சிறந்த தெளிவான அறிவாற்றல் உலகம் போற்றும் அளவிற்கு இருக்கும். கல்வியின் ஞானம், மேதைகள், அறிஞர்களாக இருப்பார்கள். லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருக்க அவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும் பாடகர்கள் ஆகவும் இருப்பார்கள். பல அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை நாம் பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |