2026 ஆனி அமாவாசை? எந்த வருடமும் இல்லாத பக்தர்கள் கூட்டம் இந்த வருடம் ஏன்?

By Sakthi Raj Jul 15, 2026 09:10 AM GMT
Report

ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை மிகச் சிறந்தது என்றாலும் ஆனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆனிமாத சர்வ அமாவாசை முன்னிட்டு கோவில்களில் அதிகாலை முதலில் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

இந்த நாளில் பக்தர்கள் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமங்கலம் கோயில் ஆனி அமாவாசையை அடுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இந்த 2 ராசிகள் ஜோடி சேரும் பொழுது ஊர் கண்ணே படும்படி வாழ்வார்களாம்

இந்த 2 ராசிகள் ஜோடி சேரும் பொழுது ஊர் கண்ணே படும்படி வாழ்வார்களாம்

இங்கு கடந்த 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பனிரெண்டாம் தேதி முதல் காலையிலிருந்து பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபாடு செய்யப்படுகின்றன.

2026 ஆனி அமாவாசை? எந்த வருடமும் இல்லாத பக்தர்கள் கூட்டம் இந்த வருடம் ஏன்? | 2026 Aani Amavasai Worship In All Over Tamilnadu

அதேபோல், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆனி சர்வம் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் புரோகிதர்கள் மூலம் எள் பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

அதேபோல் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்கள் ஹிருதாபநாசினி தீர்த்தக்குளம் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். இந்த நேரத்தில் குளத்தில் சுமார் இரண்டு டன் துணிகள் மற்றும் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அமாவாசையை முன்னிட்டு முக்கிய கோவில்களில் காவல்துறை பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதோடு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US