நீங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட நாள் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த எண் கணிதம் கொண்டும் நாம் ஒருவரின் வாழ்க்கை நிலையை கணித்து விடலாம்.
அந்த வகையில் நாம் பிறந்த தேதியை வைத்து நம்முடைய அதிர்ஷ்ட நாள் என்ன என்பதை எண்கணிதம் வழியாக தெரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு தெரிந்து கொண்டு அந்த நாட்களில் நாம் சில முக்கியமான விஷயங்களை செய்யும் பொழுது அதிர்ஷ்டம் நமக்கு சாதகமாக அமைந்து வெற்றியை கொடுக்கிறது.
அப்படியாக எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டமான நாள் என்று பார்ப்போம்.
எண் 1:
இவர்களின் அதிர்ஷ்டமான நாளாக ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது. இந்த நாளை இவர்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முக்கியமான விஷயங்களை செய்யும் பொழுது வெற்றி எளிதாக கிடைக்கிறது.
எண் 2:
இவர்களுக்கு திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்ட நாளாகும். இந்த இரு தினங்களையும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டு முக்கிய வேலையை தொடங்கலாம்.
எண் 3:
இவர்களுக்கு அதிர்ஷ்ட நாளாக செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை உள்ளது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் இந்த நாளை பயன்படுத்திக் கொண்டு அதிர்ஷ்டத்தை தன்வசம் படுத்தலாம்.
எண் 4:
இவர்களுடைய அதிர்ஷ்ட நாளாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளது. இந்த தினங்களில் இவர்கள் செய்யும் காரியம் அனைத்தும் இவர்களுக்கு நன்மையில் முடியும்.
எண் 5:
இவர்களுடைய அதிர்ஷ்ட நாளாக புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை உள்ளது. இந்த நாட்களில் இவர்கள் புதிதாக தொடங்கும் விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
எண் 6:
இவர்களுடைய அதிர்ஷ்ட நாளாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை உள்ளது. இந்த நாளை பயன்படுத்திக் கொண்டு சில காரியங்கள் செய்யும் பொழுது இவர்களுக்கு சாதகமாக அமைகிறது.
எண் 7:
இவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையை பயன்படுத்திக் கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது வாழ்க்கையில் பெரிய அளவிலான சாதனைகளை செய்யலாம்.
எண் 8:
இவர்களின் அதிர்ஷ்ட நாளான புதன் மற்றும் சனிக்கிழமையை பயன்படுத்தி அவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
எண் 9:
இவர்களின் அதிர்ஷ்ட நாளாக வியாழக்கிழமை இருக்கிறது. இந்த நாளில் செய்யும் காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு கைகூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







