நீங்கள் பிறந்த தேதி உங்களைப் பற்றி சொல்லும் ரகசியம் என்ன?
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறதது. அப்படியாக நாம் பிறந்த எண் ஒவ்வொரு நபரை பற்றிய பல்வேறு விஷயங்களை சொல்ல கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த எண் உங்களைப் பற்றி சொல்லக்கூடிய ரகசியம் என்ன? நீங்கள் எந்த விஷயங்களில் சிறந்து வராக இருப்பீர்கள் என்று பார்ப்போம்.
எண் 1:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். அதே போல் ஒரு தலைவருக்கான சிறந்த பண்பும் சுதந்திரமும் இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். இவர்களுடைய உள்ளுணர்வு தான் இவர்களின் வலிமையாகும்.
எண் 2:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எல்லாவற்றையும் சரிசமமாக பார்க்கக்கூடியவர்கள். அதைப்போல் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் இவர்களிடம் சென்றால் அதற்கு ஒரு நல்ல ஆலோசனையை சொல்லக்கூடியவர்கள்.

எண் 3:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிக சிறந்த படைப்பாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய திறமையும் இவர்களுடைய பேச்சாற்றலும் இவர்களை பல நேரங்களில் தடைகளை உடைத்து வெற்றி பெறச் செய்கிறது.
எண் 4:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பொறுமை அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொறுமையாக இருந்து மிக உறுதியாக செய்யக்கூடிய அமைப்பு பெற்று இருப்பார்கள்.
எண் 5:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சுதந்திரமாக இருப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. இவர்களுடைய மன வலிமையே இவர்களை மிகப்பெரிய உயரத்திற்கு கூட்டிச் செல்லக்கூடியதாக இருக்கும்.
எண் 6:
எந்த எண்ணில் பிறந்தவர்கள் பிறரை வழிநடத்துவதில் சிறந்தவராக இருப்பார்கள். அதேபோல் இவர்கள் சுற்றி உள்ளவர்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பார்கள். இவர்களுடைய அன்பு தான் இவர்களுடைய பலம் ஆகும்.
எண் 7:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எல்லா விஷயங்களையும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடியவர்கள். இவர்களுடைய அறிவு தான் இவர்களை பல நேரங்களில் வெற்றி அடைய செய்து விடுகிறது.
எண் 8:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஒரு மிகச்சிறந்த லட்சியவாதிகள். இவர்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருந்து அவர்களுடைய இலட்சியத்தை அடைவதற்காக போராடக்கூடிய தன்மையை பெற்று இருப்பார்கள்.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அனுதாபம் அதிகமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையை காட்டிலும் பிறருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்பொழுதும் நினைப்பார்கள். அதிகமாக மன்னிக்கும் குணம் பெற்று இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |