ஜோதிடம்: நீங்கள் எப்படிப்பட்ட நண்பர் என்று தெரியுமா?
வாழ்க்கையில் நட்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது சொந்தங்களை காட்டிலும் நட்புகளே நம்மை மீட்டுக் கொண்டு வர உடன் நின்று உதவுகிறார்கள். அப்படியாக, 12 ராசிகளில் நீங்கள் எப்படிப் பட்ட நண்பர் என்று தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்:
இவர்கள் நண்பர்களை எப்பொழுதும் சோர்வடைய விடுவதில்லை. இவர்கள் நண்பர்களின் சிறு சிறு முன்னேற்றத்தையும் கொண்டாடும் நபராக இருக்கிறார்கள்.
ரிஷபம்:
நண்பர்களின் எல்லா சுக துக்கங்களில் உடன் நிற்பவர்கள். இவர்களை நம்பி நாம் எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். நான் உன்னுடன் எப்பொழுதும் இருக்கின்றேன் என்ற தைரியம் கொடுப்பவர்கள்.
மிதுனம்:
நண்பர்கள் வட்டத்தில் எல்லோரையும் சிரித்து மகிழ்ச்சியாக வைக்கக்கூடிய நபராக இருப்பவர்கள். இவர்களுடன் இருந்தால் நம் மனதில் கவலைகள் மறந்து விடும்.
கடகம்:
நண்பர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்கள் தேடி வரும் முதல் நபர் இவர்களாகத்தான் இருக்கும். எந்த நேரத்தில் என்ன ஆறுதல் கொடுக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர்கள்.
சிம்மம்:
இவர்கள் எப்பொழுதும் நண்பர்களை அதிகம் நம்புகிறார்கள். நண்பர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
கன்னி:
இவர்கள் எப்பொழுதும் சிறப்பான முடிவை கொடுப்பவர்கள். ஆதலால் எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் இவர்களிடம் சென்றால் அதற்கான தீர்வு கிடைக்கும்.
துலாம்:
இவர்கள் எப்பொழுதும் சரியான முறையில் வழிநடத்தும் நபராக இருக்கிறார்கள். ஆதலால் நட்புகள் இவர்களிடம் ஆலோசனை பெற்றே சில காரியங்கள் செய்வார்கள்.
விருச்சிகம்:
இவர்களை யாராவது நம்பி ஏதேனும் சொல்லி விட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தனுசு:
எப்பொழுதும் நண்பர்களுக்கு வாழ்க்கையின் புரிதலை கற்றுக் கொடுப்பவர்கள். பிரச்சனையை எளிதாக மறந்து சந்தோஷமாக இருக்க வழி சொல்பவர்கள்.
மகரம்:
நண்பர்களை எப்பொழுதும் ஜெயிக்க வைத்து மகிழ்ச்சி காண வேண்டும் என்று விரும்புபவர்கள். இவர்கள் உதவியால் நண்பர்கள் பெரிய சாதனை செய்வார்கள்.
கும்பம்:
நண்பர்களுக்கு எப்பொழுது புது புது யோசனைகள் கொடுத்து வழி நடத்துவார்கள். இவர்களிடம் பொறாமை குணம் இருக்காது. ஆதலால், நட்புகளால் அதிகம் விரும்பப்படுவார்கள்.
மீனம்:
நட்புகளிடையே நேர்மையாக இருக்கக்கூடியவர்கள். நண்பர்களுக்கு நல்ல ஆலோசனை கொடுத்து வழி நடத்தும் தோழர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







