இப்படி செய்வதும் பாவம் தான்-மஹாபாரதம் உணர்த்தும் உண்மை
எத்தனை முறை உலகம் அழிந்து பிறந்தாலும் மஹாபாரதம் என்னும் பெருங்காவியம் மனிதர்களை வழி நடத்த உடன் நிற்கும்.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்?எப்படி எல்லாம் வாழ கூடாது என்பதற்கு மிக சரியான உதாரணத்தோடு நமக்கு எடுத்துரைக்கும் பெருங்காவியத்தை மனிதனாக பிறந்த அனைவரும் ஒருமுறையாவது படித்திட வேண்டும்.
அப்படியாக நாம் மஹாபாரதத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான பீஷ்மர் பற்றி தெரிந்து இருப்போம்.அவர் வாழ்க்கையில் இறுதி வரை பிரம்மச்சாரியம் கடைபிடித்தவர்.ஆனால் ,பாரத போரில் அவர் உடல் முழுவதும் அம்புகள் துளைக்கப்பட்டு அந்த அம்புகளே படுக்கையாக மாறிய நிலையில் அவர் அதன் மேல் படுத்திருந்தார்.
உடல் முழுவதும் காயப்பட்டு இருந்த பீஷ்மர் வலியின் உச்சத்தால் துடித்தார்.ஆனால் உயிர் பிரியவில்லை.காரணம்,பீஷ்மரின் தந்தை அவருக்கு ஒரு வரம் கொடுத்திருந்தார்.அதாவது பீஷ்மர் அவர் உடம்பில் இருந்து எப்பொழுது உயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்பொழுது தான் உயிர் பிரியும் என்று.
ஆனால்,பெரும் வலியின் அவதியால் பீஷமர் அவருடைய உயிர் அந்த நொடியே பிரிந்தால் நல்லது என்று எண்ணினார்.அந்த சமயம் அங்கு வந்த வியாசரிடம்,பீஷ்மர் அவருடைய அந்த நிலைமைக்கு என்ன காரணம் என்ன என்று கேட்டார்.அதற்கு வியாசர் கூறுகிறார்.
பீஷ்மா!நாம் ஒருவருக்கு மனதாலும் உடலாலும் செய்வது மட்டும் தீமை இல்லை.நம் முன் ஏதேனும் கெட்ட நிகழ்வுகள் அரங்கேறினால் அதை தடுக்காமல் பார்த்திருப்பதும் பாவ செயல் தான்.அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
அது தான் உனக்கு இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது என்றார். அதாவது வீரத்தாலும்,அறிவிலும் சிறந்து விளங்கிய பீஷ்மர் கௌரவ சபையில் திரௌபதிக்கு அநீதி நடக்கும் சமயம்,நடப்பதை பார்த்தும் பார்த்திடாதவாறு இருந்தார்.
இதை வியாசர் சொல்ல பீஷ்மர் அவர் செய்த தவறை புரிந்து கொண்டார்.உடனே பீஷ்மர் வியாசரிடம் நான் செய்த அந்த பாவத்திற்கு பரிகாரம் இல்லையா என்று கேட்டார். இருக்கிறது பீஷிமா!எவர் ஒருவர் தான் செய்தது மகா பாவம் என்று உணர்கிறார்களோ அவர்களுக்கு அந்த நொடியே பாவம் அகன்று விடும்.
இருந்தாலும் திரௌபதி கௌர சபையில் அனைவர் முன்னிலையில் நின்று தன்னை காப்பாற்றும் படி கதறிய நேரம் கேட்டும் கேட்காதது போல் முடிய உன் செவிகளும்,பார்த்தும் பார்த்திடாத போல் விலகிய உன் இமைகளும்,இங்கு நடப்பது அநீதி என்று சொல்ல தவறிய உன் நாவும்,யாரும் நெருங்கி ஜெயித்திட முடியாத வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்களும்,வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது?கேட்டது எது என்று சிந்திக்க தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவை கட்டாயம் நீ செய்த பாவங்களுக்குரிய தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.
அந்த வேதனையைப் போக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை" என்றார்.பிறகு வியாசர் எருக்கம் இலைகளைக் கொண்டுவரச் செய்து, பீஷ்மரின் கண், காது, வாய், கை,கால், தோள், தலை ஆகிய 7 அங்கங்களையும் அந்த எருக்கம் இலை வேதனை குறைந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தான் நினைத்த நொடியிலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார்.அவ்வாறு பீஷ்மர் மரணித்த நாள் தான் ரத சப்தமிக்கு மறுதினமான 'அஷ்டமி திதி' ஆகும். எனவே அதனை 'பீஷ்மாஷ்டமி என்பார்கள்.பீஷ்மர் அவர் இறக்கும் வரை பிரம்மச்சரியம் கடைபிடித்தவர்.
ஆக எவர் ஒருவர் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவர்கள் புனித நீர் நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கும், தன் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்பவர்களுக்கு எண்ணிய வாழ்க்கை அமையும், வாழ்வில் இன்பம் நிலைபெறும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |